இந்தியர் பணியிடத்தில் வைத்து கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் மூலம் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Image : கொலை செய்யப்பட்ட அனில்குமார்
ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர் ஒருவரை கடத்தி கொலை செய்து குழிதோண்டி புதைத்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் முட்டடையை சேர்ந்த அனில்குமார் வின்சென்ட் (வயது-60) என்பவரே உயிரிழந்த இந்தியர். அனில் கடந்த ஜனவரி 2ம் தேதி காணாமல் போனார். துபாயில் உள்ள டி சிங் டிரேடிங் என்ற நிறுவனத்தில் பி.ஆர்.ஓ- வாக வேலை செய்து வந்தார்.
மேலும் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தான் குடிமக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அனில் குமார் கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அனில் குமார் கடந்த 36 ஆண்டுகளாக ஊழியராக உள்ளார்.
போலீசார் விசாரணையில், அனில் குமாரை கழுத்தை நெரித்து கொன்று, வாகனத்தில் எடுத்து சென்று ஷார்ஜா பாலைவனத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி போலீஸார் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலத்தை மறைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரான முன்றாவது குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Indian Worker | Dubai Police | Pakistans Arrested