BREAKING NEWS
latest

Visa Status - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Visa Status செய்திகள், கட்டுரைகள், Visa Status புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, January 18, 2024

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு குவைத் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது

Image credit: சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்கள்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குவைத்தில் வேலைக்காக வந்து 2020க்கு முன்பு பல்வேறு காரணங்களால் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் குறிபிட்ட அபராதம் செலுத்தினால், குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குடியிருப்பு அனுமதி இல்லாமல் அல்லது குடியிருப்பு அனுமதியின் காலாவதி ஆகியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டை வீட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வரையறை செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை குவைத் தினசரி நாளிதழ் இன்று(18/01/24) வியாழக்கிழமை மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேதிப்படி இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 600 தினார் அபராதம் செலுத்தி. அந்த ரசீதுடன் வேலை செய்யப்பட்ட நிறுவனம் இருக்கிற கவர்னரேட்டில் உள்ள சம்பந்தப்பட்ட துறையை அணுகி போதுமான ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதன் மூலம் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு புதிய முடிவு பயனளிக்கும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Kuwait Residency | Visa Status

Add your comments to Search results for Visa Status

Saturday, July 31, 2021

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

சவுதி செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு,நீங்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடியு‌ம்

Image credit: Qatar Airways

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்தியர்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டவர் கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் கட்டாரில் தங்கிய பின்னர் நீங்கள் சவுதியில் நுழையலாம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கத்தார் வழியாக சவுதி அரேபியாவில் நுழைய ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் காத்திருக்கிறார்கள். கத்தாரில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட On-Arrival Visa முறை மீண்டும் துவங்கியுள்ள நிலையிலும் அதன் மூலம் சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக வெளிநாட்டவர்கள் இப்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய துவங்கியுள்ளனர். கத்தார் பயணத்திற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களும் சரி செய்தால் பயண நடைமுறைகள் எளிதாக இருக்கும்.

பயணியின் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும், திரும்பச் செல்வது உள்ளிட்ட விமான டிக்கெட், கட்டாரில் தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு, கத்தார் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ், கோவிட் எதிர்மறை ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ், புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கத்தார் இஹ்திராஸ் செயலியின் Approval ஆகியவையும், 5,000 கத்தார் ரியால்கள் பணம் வங்கியிலோ அல்லது கைவசமோ இருக்க வேண்டும் உள்ளிடவையே கத்தாரில் வந்திறங்கும் பயணி ஆன்-அரைவல் விசா பெறுவதற்கான நிபந்தனைகள் ஆகும். கத்தாரில் இறங்கிய பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவு செய்தவர்கள் பின்னர் அங்கிருந்து அடுத்த விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் செல்லலாம்.

மேலும் 14 நாட்கள் முடித்து சவுதி அரேபியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் தோஹா விமான நிலையத்தில் பல இடங்களில் வைத்து ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதாக கத்தார் வழியாக சவுதியில் நுழைந்த பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே கத்தார் வழியாக பயணிப்பவர்கள் இதுபோன்ற ஆவணங்களை Print எடுத்து கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதுபோல் தோஹா விமான நிலையத்தில் வைத்து சவுதி விசா குறித்து சில சந்தேகங்களை கீழ் மட்ட அதிகாரிகள் எழுப்பியதாக, ஆனால் மூத்த அதிகாரிகள் வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். தவக்கல்னா செயலியில் Status Immune-ஆன பிறகு நீங்கள் சவுதி அரேபியாவிற்கு வந்தால், நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கிடைக்கும். இதன் மூலம் பயணச் செலவை மேலும் குறைக்க முடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடைய ஆகஸ்டு-1 முதல் Visit விசாவில் பயணிகள் நிபந்தனைகளுடன் சவுதியில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தியும் வெளியாகியுள்ளன.

Add your comments to Search results for Visa Status