வணிக சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது
Image : Kuwait City
குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப விசா வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து வகையான விசிட் விசாக்களும் விரைவில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சீராக்கல் போன்ற காரணங்களால் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதியுடன் சிறிய அளவிலான விசாக்கள் மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த தடையை நீக்குவதன் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எந்த வகையிலும் குவைத் வருகைக்கான வழியை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் மற்ற GCC நாடுகளின் தாராளமயக் கொள்கையை இந்த விஷயத்தில் பின்பற்றவும் குவைத் நாட்டின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் ஆதாயங்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு விசிட்டிங் விசாக்களுக்கான கதவுகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.
அதேசமயம், மின்னணு இணைப்புத்துறையில் உள்துறை அமைச்சகம் செய்து சாதனை, டிஜிட்டல் வேலைகளுக்கான முன்னேற்றம் நாட்டுக்கு வருகின்ற பார்வையாளர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் என்பதை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் ஷேக் முகமது அல் சபா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டம் குடும்ப வருகை விசாக்களை தாராளமயமாக்கல் என்ற கண்ணோட்டதை நடைமுறை படுத்த காரணமாக அமைத்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Visa | FamilyVisa | Kuwait Visit