முக்கியமாக உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக இவர்கள் தாய்லாந்துக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Image : தாய்லாந்து
குவைத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் நபர்களில் இந்த நாட்டவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:
தாய்லாந்துக்கு இந்த ஆண்டு சென்றுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் குவைத் நாட்டினர் முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக தாய்லாந்து மத்திய வங்கி, தாய்லாந்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு தாய்லாந்தில் உள்ள 30 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மொத்தம் 11.9 பில்லியன் தாய் பாட்(சுமார் $344 மில்லியன்) செலவிடப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் பெரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.
குவைத்திற்கு அடுத்த படியாக கம்போடியா, மியான்மர், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடிமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் எலும்பு மற்றும் மூட்டு நோய்கள், இதய நோய்கள், இரத்த நாள நோய்கள், பல் நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
மேலும் இதய நோய், புற்றுநோய், எலும்பு, மூட்டு, நரம்பு நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகள் மருத்துவமனைகளுக்கு அதிக லாபம் தரக்கூடியவை என்று பாங்காக் போஸ்ட் ஹெல்த் சர்வீசஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட்யின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். சோரா வாசிட்சாக் கூறினார்.
Kuwait Citizen | Visit Thailand | Health Issues