BREAKING NEWS
latest

Visit Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Visit Visa செய்திகள், கட்டுரைகள், Visit Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, November 9, 2020

குவைத் உள்துறை காலாவதியான விசாக்கள் உள்ளவர்கள் நவம்பர் 30- க்கு முன்னர் குவைத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்:

குவைத் உள்துறை காலாவதியான விசாக்கள் உள்ளவர்கள் நவம்பர் 30- க்கு முன்னர் குவைத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்:


நவம்பர்-9,2020

குவைத் உள்துறை அமைச்சகம் இன்று திங்கட்கிழமை(09/11/2020) மாலையில் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியில் தற்போது குவைத்தில் உள்ள அனைத்து வகையான வேலை தொடர்பான நுழைவு விசா(Enter Visa) வைத்திருப்பவர்கள் மற்றும் அனைத்து வகையான வருகை விசா(Visit Visa) வைத்திருப்பவர்களும் நவம்பர் 30-க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

கொரோனா பிரச்சினை காரணமாக முன்னர் நுழைவு விசா(Enter Visa) மற்றும் வருகை விசா(Visit Visa) விசாவில் குவைத்தில் வந்திருந்த நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட்-31 வரையில் Auto Renewal மூலம் உள்துறை அமைச்சகம் விசா புதுப்பித்தல் செய்து வழங்கியது, அதையடுத்து மீண்டும் 3 மாதங்களுக்கு புதுப்பித்தல் செய்து வழங்கியது. அதாவது வருகிற நவம்பர்-30 வரையில் செல்லுபடியாகும். இதையடுத்து அவர்கள் இனி எந்த சட்ட சலுகைகளையும் பெற முடியாது எனவும். இதற்கு காரணம் இந்த கால இடைவெளியில் இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் தற்காலிக விசாகளை வேலை விசாக்களாக( Permanent Visa) மாற்ற அதிகாரிகள் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் ஸ்பான்சர்கள்(நிறுவன உரிமையாளர்கள்) மற்றும் முதலாளிகள்(அரபிகள்) நவம்பர்-30 ற்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ தளத்தில்  https://www.moi.gov.kw/main/  -யில் நீங்கள் வேலைக்கு அழைத்து வந்துள்ள நபர்களின் தற்காலிக விசாவை தொழில் விசாக்களாக புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் இப்படி புதுப்பித்தல் செய்ய முடியாத விசாகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் மூலம் மறுஆய்வு செய்வதன் மூலமாகவோ விசாகளை புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள நவம்பர் 30-ஆம் தேதி காலக்கெடு முடிந்த பிறகு காலாவதியான விசா உள்ள நபர்களுக்கு எதிராக அனைத்து சட்ட நடைமுறைகளை தொடங்குவதாகவும், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதி நாடு கடத்தப்படும் எனவும்.அதுவும் அவர்கள் திருப்பி குவைத் வரமுடியாதபடி Finger வைத்து அனுப்பப்படும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.

Editor: Ktpnews Official 

Add your comments to Search results for Visit Visa

Sunday, August 25, 2019

குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா எடுக்க முடியும்....


குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா
எடுக்க முடியும்.....


கேள்வி:
குவைத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் கேள்வி நான்  மாதத்திற்கு 430 தினார் சம்பளம் வாங்கி வருகிறேன்... நான் வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்....??????

பதில்:

தற்போது( இன்று காலை) வரையில்  நடைமுறையில் உள்ள விசா சட்டத்தின் கீழ் நீங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கு ஒருமுறை விசா எடுத்து அவர்கள் குவைத்திற்கு வந்தால். அவர்கள்  எந்த தேதியில் கடைசியாக குவைத்திலிருந்து  தாயகம் திருப்புகிறார்களோ அந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அடுத்த சுற்றுலா விசா( Visit Visa) எடுக்க முடியும். ஆக ஒரு வருடத்தில்  இரண்டு முறை இந்த விசா எடுக்க முடியும்.

மேலும் ஒரு Youtube தளம் பதிவு செய்துள்ள வீடியோவில் சாதாரணமாக ஒருவர் சுற்றுலா விசாவில் குவைத்தில் வந்தால் 3 மாதங்கள் வரையில் குவைத்தில் தங்க முடியும் என்று பதிவு செய்துள்ளது பார்க்க முடிந்தது அது முற்றிலும் தவறானது. 1 மாதங்கள் மட்டுமே தங்க முடியும் இதுதான் சட்டம்.

கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைக்கு மட்டுமே 3 மாதங்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா எடுக்க முடியும், மற்ற இரத்த சொந்தங்கள் தனிப்பட்ட நபர் யார் வந்தாலும், அந்த விசாவின் காலாவதி 1 மாதம் மட்டுமே.

மேலும் வேலைக்காக வரும் நபர்களுக்கு வழங்கபடும் எந்தவொரு உள்நுழைவு விசாவும் 3 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்தில் இருக்கும். அந்த நபர் குவைத் வந்து இங்குள்ள மெடிக்கல் முடித்து  தகுதி சான்றிதழ்கள் பெற்ற பிறகு மட்டுமே நிரந்தர விசா அடிப்பார்கள்( அதுவும் கம்பெனிகளை பொறுத்து ஒரு வருடமோ(அல்லது)  இரண்டு வருடமோ அடிப்பார்கள்)

இதை தவிர குவைத்தில் உள்ள  கம்பெனிகள் சில  தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்.....
ShareAll......
Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Visit Visa

Wednesday, April 7, 2021

ஓமான் நாளை முதல் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் செய்து புதிய தகவல் வெளியாகியுள்ளது

ஓமான் நாளை முதல் நன்முறையில் வருவதாக அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் செய்து புதிய தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது

Image : Beautiful Oman

ஓமான் நாளை முதல் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் செய்து புதிய தகவல் வெளியாகியுள்ளது

ஓமான் சுப்ரீம் கவுன்சில் நேற்று(05/04/21) சில முக்கியமான முடிவுகளை வெளியிட்டிருந்தது.அதில் முக்கியமான ஒன்று சவுதி உள்ளிட்ட மற்ற நாடுகளில் நுழைய தற்காலிகமாக ஓமானுக்கு வருகின்ற யாரும் நாளை(08/04/21) முதல் நாட்டில் நுழைய முடியாது எனவும்.ஆனால் நாளை முதல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்(அதாவது அங்கு ஏற்கனவே வேலை செய்து Residence விசா கைவசம் உள்ளவர்கள்) மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்பதாகும். ஆனால் அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்து புதிய அறிக்கை இன்று(07/04/21) வெளியாகியுள்ளது.

அதன் விபரங்கள் புதிதாக Issues செய்துள்ள விசிட் விசா,Express visa, News Family Visit visa மற்றும் சுற்றுலா விசா பெற்றுள்ள நபர்கள் நாட்டில் தற்காலிகமாக மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் நாளை மதியம் 12:00 மணிமுதல் நுழைய முடியாது. அதுபோல் இன்று முதல் மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் எந்தவகையான புதிய விசாவும் Issue செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் Employment visa மற்றும் புதிய Family Joint விசா கிடைத்த நபருகள் ஓமானில் நுழைய முடியும்.

அதுபோல் ஓமானில் Visiting விசாவில் வந்து தங்கியுள்ள நபர்கள் உங்களுக்கு எதாவது Job Offer இருந்தால் அந்த வேலைக்கு விசா மாற்றம் செய்யலாம். ஓமானை பொறுத்த வரையில் Visiting Visa மற்றும் Tourist Visa இரண்டும் வெவ்வேறு ஆகும்.Tourist Visa யில் உள்ளவர்கள் இப்படி மாற முடியாது. அதுபோல் எந்த வகையான விசாவிலும் ஓமானில் வந்து விசா காலாவதி ஆகி தங்கியுள்ள நபர்கள் அபராதம் செலுத்தாமல் உங்கள் தாய் நாடுகளுக்கு வழக்குகள் எதுவும் இல்லை என்றால் திரும்பலாம். 2021 முதல் ஓமானில் NOC இல்லாமல் விசா மாறமுடியும் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் இதுவரையில் அது நடைமுறையில் வ‌ந்ததாக தெரியவில்லை.

Add your comments to Search results for Visit Visa

Wednesday, December 14, 2022

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

அமீரகத்தில் இருந்தவாறே அதை மீண்டும் 2 மாதங்களுக்கு புதுப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Uae

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

இந்த புதிய விதிமுறை அமீரகத்தின் துபாய் தவிர்த்து மற்ற எமிரேட்ஸ்களில் நேற்று(13/12/22) நடைமுறையில் வந்துள்ளது. இதன் காரணமாக அமீரகத்திற்கு 2 மாதகால Validity Visit விசாவில் வேலைக்காக செல்கின்ற நபர்கள், 2 மாதங்கள் முடியும் முன்னர் நிரந்தரமான வேலை கண்டுபிடித்து கம்பெனி விசாவுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த தினம் வரையில் 2 மாதங்களுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றாலும், அமீரகத்தை விட்டு வெளியேறாமல் அங்கிருந்து கொண்டே மேலும் 2 மாதங்களுக்கு Visit விசாவை புதுப்பிக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை ரத்து ஆகியுள்ளதால் அவர்கள் 2 மாதங்களுக்குள் வேலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் Exit அடித்து நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் தங்கியிருந்து மீண்டும் புதிய விசா அடித்து அமீரகத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

இது பெரும் பணச்செலவு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் எமிரேட்ஸில் இந்த சட்டம் ரத்து செய்யவில்லை என்றாலும் வரும் நாட்களில் துபாயை மட்டுமே குறிப்பிட்டு விசா பெற முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கும் புதிய சட்டம் நடைமுறையில் வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Visit Visa | Uae Visa | Renewal Stop |

Add your comments to Search results for Visit Visa

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to Search results for Visit Visa

Thursday, September 12, 2024

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் 20ம் நம்பர் விசா 18ம் நம்பருக்கு மாற்ற வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

Image : குவைத் வேலை வாய்ப்பு மைய‌ம்

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள்(Article-20) தங்களுடைய விசாவை தனியார்(Article-18) துறைக்கு மாற்றுவது தொடர்பான 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்-6 இன்று(12/09/2024) வியாழக்கிழமையும் காலாவதியாகிறது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி(அதாவது இன்று வரையில்) ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல முதலாளிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரையில் விசா மாற்றம் பெற விண்ணப்பம் அளித்தவர்களின் பரிவர்த்தனைகள்(மனுக்கள்) பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏற்கனவே சுமார் ஐம்பதாயிரம் பேர் இந்த அறிவிப்பு மூலம் விசா மாற்றம் செய்து பயனடைந்துள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | Visit Visa

Add your comments to Search results for Visit Visa

Monday, February 5, 2024

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

வெளிநாட்டினருக்கு குடும்ப விசிட் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்த முடிவு பிப்ரவரி-7,2024 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். METTA தளத்தின் மூலம் விசா பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாகும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விசிட் விசா பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் 400 தினார் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 800 தினார் சம்பளம் உள்ளவர்களுக்கு, மற்ற உறவினர்கள் (சகோதரர்கள், மனைவியின் தாய் தந்தை, மனைவி/உடன்பிறப்புகள்) ஆகியோருக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குவைத்திற்கு சொந்தமான எதாவது ஒரு தேசிய விமான நிறுவனத்தில் விசிட் வந்தவர்கள் வருவதற்கும், திரும்ப செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து கொண்டு மட்டுமே நாட்டை(குவைத்தை) அடைய வேண்டும். மேலும் விசிட் விசாவை வசிப்பிட(Residence Permit) விசாவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் விசிட் வந்துள்ள நேரத்தில் எதாவது காரணத்தால் சிகிச்சை தேவை என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். விசிட் விசா காலம் முடிந்தும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசிட் வந்த நபர் மற்றும் அவருக்கு விசா எடுத்த ஸ்பான்சர் ஆகியோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்டவை மற்ற நிபந்தனைகள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Visit Visa | Kuwait Visa | Visit Kuwait

Add your comments to Search results for Visit Visa

Friday, May 21, 2021

பஹ்ரைன் வழியாக இன்று முதல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியாது;புதிய விதிமுறை நடைமுறையில் வந்துள்ளது

பஹ்ரைன் வழியாக சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாது;இன்று முதல் புதிய விதிமுறை நடைமுறையில் வருகின்றன என்ற தகவ‌ல் வெளியாகியுள்ளது

பஹ்ரைன் வழியாக இன்று முதல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க முடியாது;புதிய விதிமுறை நடைமுறையில் வந்துள்ளது

பஹ்ரைனின் புதிய முடிவு இந்தியாவில் இருந்து சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு திரும்ப விரும்பும் வெளிநாட்டவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேலை விசா(Resident Visa) இல்லாதவர்களை பஹ்ரைனுக்கு அனுமதிப்பதில்லை என்ற முடிவு இன்று(21/05/21) முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி உள்ளிட்ட நாட்களுக்கு நுழைவதற்கு முன்பு 14 நாட்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தலில் செய்ய முடிந்த ஒரே இடமான பஹ்ரைன் இருந்து வந்தது.

கொரோனா காரணமாக மற்ற பல நாடுகள் இதற்கு கடந்த சில மாதங்களாக தடைவிதித்துள்ளது. இந்நிலைதில் பஹ்ரைனில் குடியுரிமை விசா(பஹ்ரைன் நாட்டின் விசா) இல்லாதவர்களை நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்ற புதிய முடிவு இப்போது இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு ஒரு பின்னடைவாகும். இந்த முடிவு சவுதி உள்ளிட்ட மற்ற வளைகுடா நாடுகளுக்கு செல்ல பஹ்ரைனை தற்காலிக புகலிடமாக கொண்டு பயணிக்கும் நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், சவுதி அரேபியாவுக்குச் செல்வோர் இதுவரை பஹ்ரைனுக்கு வருகை தந்து பஹ்ரைன் வருகை விசா(Visit Visa) பெற்று 14 நாட்கள் தங்கியிருக்கிறார்கள் பின்னர் சவுதிக்கு புறப்பட்டு செல்வார்கள். அந்த ஒரு வாய்ப்பும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பஹ்ரைன் நாட்டின் வேலை விசா அல்லது வேறு எந்தவிதமான விசாவும் கைவசம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வருகை(Visit) விசாக்களை வழங்க வேண்டாம் என்று பஹ்ரைன் முடிவு செய்துள்ளது. ஜூன்-3,2021 வரை தற்காலிக தடை அமலில் இருந்தாலும், கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இதை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த முடிவு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட பஹ்ரைன் Package Booking செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பஹ்ரைன் இதுபோன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Add your comments to Search results for Visit Visa

Wednesday, June 30, 2021

குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற செய்தியின் உண்மை நிலை இதுதான்....

குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தரவை தவறான முறையில் பரப்பப்படுகிறது

Image : விசா நகல் செய்திக்காக மட்டும்

குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற செய்தியின் உண்மை நிலை இதுதான்....

குவைத்தில் விசிட் விசாவில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்று சில தளத்தில் தவறுதலாக செய்தி பரப்பப்பட்டு வருகின்றன அதன் உண்மை நிலையினை இங்கே அறியலாம். அதாவது குவைத்தில் நீங்கள் தொழில் துவங்குவது தொடர்பாக வணிக பார்வையாளர் விசாவில்(Business Visit Visa) வந்திருந்தால் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்றே கொரோனா அவசர குழு அனுமதி அளித்து நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியின் மையக்கரு ஆகும். ஆனால் சிலர் விசிட் விசாவில் குவைத்தில் வந்தவர்கள் அதை தொழில் விசாவாக மாற்றலாம் என்ற வண்ணத்தில் செய்தியை திரித்து பரப்பி வருகின்றனர்.

இந்த புதிய அறிவிப்பு மூலம் சாதாரணமாக குவைத்தில் வேலை தேடுகின்ற வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர் பெரிதாக பயனடைய மாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவியுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கொரோனா அவசரக் குழு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. எனவே வணிக பார்வையாளர் விசாவில் தற்போது நாட்டில் தங்கியிருப்பவர்கள் மட்டுமே குவைத்தை விட்டு வெளியேறாமல் வேலை விசாவுக்காக மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பிற நடைமுறைகள் முடித்து தங்களின் வணிக பார்வையாளர் விசாவை பணி விசாவிற்கு மாற்ற முடியும்.

நாட்டிற்கு வெளியில் இருந்து புதிதாக வணிக பார்வையாளர் விசாக்களில் தொழிலாளர்களை அழைத்து வருவதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குவைத் நாட்டில் வணிக பார்வையாளர் விசாக்கள் அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படிப்பட்ட விசாவில் நாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த காரணத்திற்காக, புதிய அறிவிப்பு சாதாரணமாக வேலை தேடுபவர்கள் அல்லது தொழில்முனைவோருக்கு பெரிதும் பயனளிக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய வணிக பார்வையாளர் விசாக்கள் வழங்கி, அவர்கள் குவைத் வந்த பிறகு அவற்றை வேலை விசாவாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டால் புதிய அறிவிப்பு பலருக்கு பயனளிக்கும்.

நாட்டில் பெரும்பாலும் தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வருவது உணவகத் துறையில்(Restaurant) உள்ளவர்கள். இவற்றில் பெரும்பாலானவை ஜமியாக்களின் கீழ் இயங்குகின்றன. வணிக பார்வையாளர் விசா வழங்குவதற்கு பல விதிமுறைகள் உள்ளன. இந்த காரணத்திற்காக, சிறு தொழில்முனைவோருக்கு வணிக பார்வையாளர் விசா கிடைப்பது மிகவும் அரிதாகும். இதற்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி என்பது ஜமியாக்களின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஜமியாக்களின் பெயரிலேயே வணிக பார்வையாளர் விசாக்களை வழங்குவதாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இவை அனைத்தும் முற்றிலும் நடைமுறைக்கு மாறானவை ஆகும். எனவே, புதிய தொழில் விசாக்கள்(Work Visa) வழங்குவதை மீண்டும் தொடங்குவது நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறைக்கு ஒரே தீர்வாக கருதப்படுகிறது.

Add your comments to Search results for Visit Visa

Monday, May 24, 2021

சவுதிக்கு திரும்ப முடியாத நபர்களின் விசாக்கள் இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

சவுதிக்கு மீண்டும் திரும்ப முடியாத நபர்களின் விசா இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது

Image : சவுதி மன்னர்

சவுதிக்கு திரும்ப முடியாத நபர்களின் விசாக்கள் இலவசமாக நீட்டிக்க மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

விடுமுறை உள்ளிட்ட பல்வேறுபட்ட காரணங்களுக்காக தங்கள் நாடுகளுக்கு சென்று மீண்டும் சவுதிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் இக்காமா, Exit, Re-entry Visa உள்ளிட்ட விசாக்களும் இலவசமாக புதுப்பித்தல் செய்து வழங்கபடும். இதேபோல் Visit Visa வும் இலவசமாக நீட்டிப்பு செய்து வழங்கப்படும். மன்னர் சல்மான் அவர்கள் இதற்காக சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார் என்ற செய்தி இன்று(24/05/21) சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. புதிய அறிவிப்பின்படி மேற்குறிப்பிட்ட அனைத்து வகையான விசாக்களும் இலவசமாக 02/06/2021 வரையில் கால நீட்டிப்பு செய்வதற்காக மன்னர் சல்மான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பு சவுதியில் நேரடியாக நுழைவதற்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியா, இலங்கை உட்பட 20 ற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மக்களுக்கு மிகவும் ஆறுதலான செய்தி ஆகும். இது குறித்த விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு தேவையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் முடிக்கப்படும். இதற்காக மொத்த செலவையும் நிதி அமைச்சகம் ஏற்கும். புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாட்களில் National Information Center உடன் சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம்(ஜவாசத்) இணைந்து தேவையான நடைமுறைகளை நிறைவு செய்யும். இந்த விசாக்கள் தானாக Auto Renewal முறையில் புதுப்பிக்கப்படும்.

Add your comments to Search results for Visit Visa

Monday, March 22, 2021

குவைத்தில் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை,நெருக்கடியில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள்

குவைத்தில் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை,நெருக்கடியில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள்;உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி தீர்மானம் எடுப்பதாக அறிவிப்பு

குவைத்தில் தொழில்நுட்ப ஊழியர்களின் பற்றாக்குறை,நெருக்கடியில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள்

குவைத்தில் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்தல் மற்றும் அவர்களின் நுழைவு விசாக்களை வழங்குதல் போன்றவற்றை விரைவுப்படுத்தும் குவைத் அமைச்சகத்தின் அவசரகால மந்திரிசபை குழுவின் பொதுச் செயல்பாட்டுத்துறை, நாட்டின் தொழில் துறையிலிருந்து உள்ள உயர்மட்ட வட்டங்களை அழைத்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.வருகை விசாக்கள்(Visit Visa) மற்றும் பணி விசாக்கள்(Work Visa) வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் மந்தமாக நடைபெற்று வருவதால் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் மீகவும் சவாலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உற்பத்திக்கான பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்றவற்றை இயக்கத் தேவையான தொழில்நுட்ப ஊழியர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படுவது பல தொழிற்சாலைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Visit Visa

Sunday, August 22, 2021

இந்தியர்கள் விசிட் விசாவில் துபாய் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா,இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிடிங் விசாவில் நிபந்தனைகளுடன் துபாயில் நுழைய அனுமதி

Image credit: Fly Dubai

இந்தியர்கள் விசிட் விசாவில் துபாய் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்கியிருந்தால் விசிட் விசாவில் துபாயில் நுழையலாம் என்று Fly Dubai விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படி பயணம் மேற்கொண்டால் கடந்த இரண்டு வாரம் தங்கியிருந்த நாட்டின் அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்படி பயணிக்கும் பயணிகளுக்கும் GDRFA ஒப்புதலும் கட்டாயமாகும். மேலும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவும் பயணத்தின் போது எடுத்துவர வேண்டும். பரிசோதனை தொடர்பான சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபியில் QR குறியீடு உள்ளதாக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவிற்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருப்பவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் ட்விட்டரில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Dubai Visa | Visit Visa | Fly Dubai

Add your comments to Search results for Visit Visa

Thursday, September 16, 2021

குவைத்தில் குடும்ப(Article-22) மற்றும் விசிட்(Article-14) விசாக்கள் நிபந்தனைகளுடன் குடிவரவுத்துறை வழங்க துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் நிபந்தனைகளுடன் குடிவரவுத்துறை வழங்க துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

Image : புகைப்படம் செய்தி பதிவுக்கான மட்டுமே

குவைத்தில் குடும்ப(Article-22) மற்றும் விசிட்(Article-14) விசாக்கள் நிபந்தனைகளுடன் குடிவரவுத்துறை வழங்க துவங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது

குவைத்திலுள்ள சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை தாயகத்தில் இருந்து இப்போது விசிட் விசாவில் அழைத்து வரலாம். விசாக்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேபோல் மருத்துவ ஊழியர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விசிட் விசாக்களை குடும்ப விசாவாக மாற்றவும் முடியும். நாட்டின் சுகாதாரத்துறை, பாதுகாப்பு துறை , National Guards மற்றும் தேசிய பெட்ரோலியம் துறை உள்ளிட்ட இடங்களில் வேலை செய்கின்ற மருத்துவ ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான Family Enter விசா வழங்கப்படும்.

மேலும் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்கின்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்ப விசா. நாட்டில் நுழைய பிறகு குடியிருப்பு(Residency) பெற முயற்சி செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரம் வழங்கினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கணவருக்கா Tourist Visit விசா வழங்கப்படும். மருத்துவத் துறையில் உள்ள மற்ற பெண் ஊழியர்களின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கான Tourist Visit விசா, தனியார் கல்வித் துறையில் பணிபுரியும் ஆண்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் விசா, அதுவே பெண் ஆசிரியர்கள் என்றால் கணவருக்கான Tourist Visit விசா வழங்கப்படும், ஆனால் நாட்டில் நுழைய பிறகு குடியிருப்பு(Residency) பெற முயற்சி செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்.

அதேபோல் பள்ளி கல்வி இயக்குநர், உதவி இயக்குனர், ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வரலாம். மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழில் விசாவில் பணிபுரிந்து, இகாமா பெறாதவர்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர நிறுவனத்தின் பெயரில் Commercial Visitor Visa வழங்கப்படும். ஆனால் இவர்கள் குடும்ப விசாவுக்கு மாற்றுவதற்கு முன்னர் Police Clearance Certificate வழங்கப்படும் என்று உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை புதிய அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில இரண்டு நாட்களாக இந்த வகையான விசாக்கள் சிறிய அளவில் வழங்க துவங்கியுள்ளது என்பதை தினசரி குவைத் பத்திரிக்கை உறுதிபடுத்தியுள்ளது.

Add your comments to Search results for Visit Visa

Tuesday, April 6, 2021

சவுதிக்கு நுழைய தற்காலிகமாக ஓமான் வருகின்ற வெளிநாட்டினர் இனிமுதல் ஓமானில் நுழைய முடியாது

சவுதிக்கு நுழைய தற்காலிகமாக ஓமான் வருகின்ற வெளிநாட்டினர் இனிமுதல் ஓமானில் நுழைய முடியாது என்ற புதிய செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

சவுதிக்கு நுழைய தற்காலிகமாக ஓமான் வருகின்ற வெளிநாட்டினர் இனிமுதல் ஓமானில் நுழைய முடியாது

ஓமன் சுப்ரீம் கவுன்சில் இன்று(05/04/21) அதிரடியாக முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமான ஒன்று ஏப்ரல் 8 முதல், குடியுரிமை(Civil Id) அட்டை கொண்ட குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள்(அதாவது அங்கு ஏற்கனவே வேலை செய்து Residence விசா கைவசம் உள்ளவர்கள்) மட்டுமே ஓமானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல் வேறு நாடுகளுக்கு செல்கின்ற பயணிகள்(இணைப்பு விமானங்கள் மூலம் வருகின்ற பயணிகள்) ஓமன் விமான நிலையங்கள் வழியாக மட்டுமே பயணிக்க முடியும் என்றும் நாட்டின் உள்ளே நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 8 மதியம் 12:00 மணிக்கு நடைமுறையில் வரும், எனவே அதன் பிறகு ஓமன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களில் ஓமன் அடையாள அட்டை(Civil Id) வைத்திருப்பவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் சவுதியில் நுழைய 14 நாட்கள் தற்காலிக புகலிடமாக ஓமனை பயன்படுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது. சுருக்கமாக சொன்னால் ஓமானில் நுழைய Visit Visa கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இனிமேல் புதிதாக இந்தியாவிலிருந்து ஓமனில் நுழைந்து தற்காலிக புகலிடமாக அங்கு தங்கியிருந்து பி.சி.ஆர் சான்றிதழ் பெற்று சவுதியில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனிமுதல் நேபாளம் மற்றும் பஹ்ரைன் நாடுகளை தேர்வு செய்துக்கொள்வது நல்லது. அதிலும் பஹ்ரைன் குறிபிட்ட சில தகுதியிலான சவுதி விசா கைவசம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக நுழைவு விசாவை வழங்குகின்றது. ஆனால் தற்பொழுது ஓமனில் தங்கியுள்ள நபர்கள் சவுதி வருவதற்கு பிரச்சனை இருக்காது.

Add your comments to Search results for Visit Visa

Friday, August 13, 2021

சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டவர்களின் காலவதியான விசா விசாக்கள் இலவசமாக நீட்டிக்கப்படும்

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் பயன்படுத்தப்படாத சவுதி விசிட் விசாக்கள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும்

Image : சவுதி மன்னர் அவர்களின் புகைப்படம்

சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டவர்களின் காலவதியான விசா விசாக்கள் இலவசமாக நீட்டிக்கப்படும்

இந்தியா உட்பட பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து சவுதியில் வருவதற்காக எடுக்கப்பட்ட விசிட் விசாக்களின் காலாவதி செப்டம்பர் 30,2021 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. விசா நீட்டிப்பு இலவசமாக எந்த கட்டணம் இல்லாமல் தானாகவே நீட்டிக்கப்படும் என்று உ‌ள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கீழே உள்ள Link மூலம் https://enjazit.com.sa/enjaz/extendexpiredvisa விசா தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் அறிய முடியும். மேலும் அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து சவுதியில் நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், சவுதியில் நுழைய முடியாத காரணத்தால் காலாவதியான விசிட் விசா நபர்களே இதன் பலனை அடைவார்கள் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த மாதம் பாஸ்போர்ட் இயக்குநரகம்(ஜவாசத்) நாட்டிற்கு வெளியே உள்ள நேரடியாக நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் இக்காமா, Exit, Re-entry விசாக்கள் மற்றும் விசிட் விசா ஆகியவற்றின் காலவதியை ஆகஸ்ட்-31,2021 வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று அறிவித்தது. மன்னர் சல்மான் அவர்களின் உத்தரவின்படி தற்போது பயணத் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதேநேரம் Multiple entry விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த இலவச புதுப்பித்தல் கிடையாது என்று அந்த நேரத்தில் ஜவாசத் தெளிவுபடுத்தியிருந்தது. மேலும் வேலை விசா(இக்காமா) மற்றும் Visit Visa வைத்திருக்கும் பின்வரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மூன்றாவது நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பின்னரே சவுதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் இந்தியா,பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகியவை நேரடியாக நுழைய தற்காலிகமாக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Add your comments to Search results for Visit Visa

Wednesday, November 24, 2021

குவைத்தில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு வணிக விசிட் விசாக்கள் தொழில் விசாவாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

குவைத்தில் வணிக விசிட் விசாக்கள் தொழில் விசாவாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

Image : செய்தி பதிவுக்கான மட்டமே

குவைத்தில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு வணிக விசிட் விசாக்கள் தொழில் விசாவாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

குவைத்தில் வணிக விசிட் விசாவில்(commercial visit visa) வருகின்ற நபர்கள் அதை தொழில் விசாக்களாக மாற்றும் வசதி தற்காலிகமாக நிறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த புதிய முடிவு நடைமுறைக்கு வரும் என்று மனிதவள ஆதாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் கடந்த வாரம் கொரோனா அவசர கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் புதிய அலை தீவிரமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சுமார் 21 மாத இடைவெளிக்குப் பிறகு குவைத்திற்கான அனைத்து வகையான விசாக்களையும் இந்த அக்டோபர் மாதம் மீண்டும் வழங்குவதை தொடங்க அமைச்சரவை முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது.

அதன் ஒரு பகுதியாக வணிக விசிட் விசாக்கள் பணி விசாக்களாக மாற்றப்பட்டு மனித வளத்திற்கான பொது ஆணைய குழுவால் அங்கீகாரமும் வழங்கப்பட்டது. மேலும் மனித வள மேன்பாட்டு துறையின் தானியங்கி வசதி மூலம் ஏற்கனவே பெறப்பட்ட விசா மாற்ற விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் எனவும்,ஆனால் இன்று முதல் தானியங்கி முறையில் விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Visit Visa

Tuesday, August 3, 2021

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

அமீரகத்தில் ஆகஸ்டு-5 முதல் வெளிநாட்டினர் நுழைய சற்றுமுன் அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது

Image credit: Emirates Airlines

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட்-5,2021 முதல் அதாவது நாளை மறுநாள் முதல் Uae Validity Work Permit(குடியிருப்பாளர்) உள்ளவர்கள் அனைவருமே நிபந்தனைகள் பின்பற்றி வரலாம் என்று நாட்டின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் மற்றும் தேசிய அவசரநிலை நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையமும் இன்று(03/08/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல்- 24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று தடை நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் அமீரகத்தில் நுழைய முடியாமல் நிலவிவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பின்வரும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகள் மீதான தடையினை நீக்கியுள்ளாதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி ஆகஸ்டு-5,2021 முதல் அமீரகத்தில் நுழைய நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. Validity Work Permit  உள்ள நபராக இருக்க வேண்டும்(இ‌வ்வளவு நாட்களுக்குள் Validity விசா உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை, 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் கடந்தவர்கள் வரலமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் அதனால் இந்த விளக்கம்)
  2. அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், அதவாது இர‌ண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்தவராக இருக்க  வேண்டும். இந்தியாவின் கோவிட்சீல்ட் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.
  3. துபாயில் வசிக்கின்றவர்கள் என்றால்  ICA தளத்தில் பதிவு செய்தும், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்களில் வசிப்பவர்கள் GDRFAD தளத்தில் பதிவு செய்து அதிகாரிகளிடம் புறப்படுவதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். 
  4. இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் QR-CODE உடன், உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதை பயணத்தின் போது உங்கள் கைவசம் வைத்திருக்கவும் வேண்டும்.
  5. முன்னர் அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட PCR Test Negative சான்றிதழ் மற்றும் புறப்படும் விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் Rapid Test எடுத்துக்கொண்ட Negative சான்றிதழ் ஆகியவையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  6. அமீரக விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, விமான நிலையத்தில் வைத்து மற்றொரு PCR பரிசோதனை மீண்டும்  குடியிருப்பாளருக்கு நடத்தப்படும்(பரிசோதனை முடிவு வெளிவர 12 மணிநேரம் முதல் ஒரு நாட்கள் வரையில் ஆகலாம், சில நேரங்களில் அதுவரையில் Self Quarantine இருக்க வேண்டியது இருக்கும்)
  7. உங்கள் விசா காலாவதி பற்றி சந்தேகம் உள்ளவர்களுக்கான பதில். நாளைய தினம் உங்கள் விசா முடிகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் இன்றைய தினம் வரையில் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி அமீரகத்திற்கு பயணிக்க முடியு‌ம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
  8. இதுபோல் Visit Visa வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலும்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேநேரத்தில் அமீரகத்தில் பணிபுரியும் கீழ் குறிபிட்ட பிரிவினர்கள் மட்டும் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி வரலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை செய்கின்ற தொழில்நுட்ப(டெக்னீசியன்கள்) வல்லுநர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப வாய்ப்புள்ள நபர்கள் ஆனால் இவர்களிடம் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி இருக்க வேண்டும், பெடரல் மற்றும் Local Government Agencies யில் பணிபுரிபவர்களும் நாடு திரும்பலாம். அதேபோல் துபாயில் எக்ஸ்போ 2020 யின் பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பான்சர்கள் ஆகியோருக்கும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Visit Visa

Saturday, July 31, 2021

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

சவுதி செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு,நீங்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடியு‌ம்

Image credit: Qatar Airways

இந்தியர்கள் தற்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவிற்குள் மீண்டும் நுழைய முடிகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது

இந்தியர்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டவர் கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். 14 நாட்கள் கட்டாரில் தங்கிய பின்னர் நீங்கள் சவுதியில் நுழையலாம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கத்தார் வழியாக சவுதி அரேபியாவில் நுழைய ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் காத்திருக்கிறார்கள். கத்தாரில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட On-Arrival Visa முறை மீண்டும் துவங்கியுள்ள நிலையிலும் அதன் மூலம் சவுதி அரேபியாவிற்குள் நுழைய முடியுமா என்பது குறித்து கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக வெளிநாட்டவர்கள் இப்போது கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்குள் நுழைய துவங்கியுள்ளனர். கத்தார் பயணத்திற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களும் சரி செய்தால் பயண நடைமுறைகள் எளிதாக இருக்கும்.

பயணியின் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் இருக்க வேண்டும், திரும்பச் செல்வது உள்ளிட்ட விமான டிக்கெட், கட்டாரில் தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு, கத்தார் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ், கோவிட் எதிர்மறை ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ், புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கத்தார் இஹ்திராஸ் செயலியின் Approval ஆகியவையும், 5,000 கத்தார் ரியால்கள் பணம் வங்கியிலோ அல்லது கைவசமோ இருக்க வேண்டும் உள்ளிடவையே கத்தாரில் வந்திறங்கும் பயணி ஆன்-அரைவல் விசா பெறுவதற்கான நிபந்தனைகள் ஆகும். கத்தாரில் இறங்கிய பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவு செய்தவர்கள் பின்னர் அங்கிருந்து அடுத்த விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் செல்லலாம்.

மேலும் 14 நாட்கள் முடித்து சவுதி அரேபியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் தோஹா விமான நிலையத்தில் பல இடங்களில் வைத்து ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதாக கத்தார் வழியாக சவுதியில் நுழைந்த பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே கத்தார் வழியாக பயணிப்பவர்கள் இதுபோன்ற ஆவணங்களை Print எடுத்து கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதுபோல் தோஹா விமான நிலையத்தில் வைத்து சவுதி விசா குறித்து சில சந்தேகங்களை கீழ் மட்ட அதிகாரிகள் எழுப்பியதாக, ஆனால் மூத்த அதிகாரிகள் வந்து அந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். தவக்கல்னா செயலியில் Status Immune-ஆன பிறகு நீங்கள் சவுதி அரேபியாவிற்கு வந்தால், நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு கிடைக்கும். இதன் மூலம் பயணச் செலவை மேலும் குறைக்க முடியும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடைய ஆகஸ்டு-1 முதல் Visit விசாவில் பயணிகள் நிபந்தனைகளுடன் சவுதியில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தியும் வெளியாகியுள்ளன.

Add your comments to Search results for Visit Visa

Sunday, February 4, 2024

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வணிக சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப விசா வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து வகையான விசிட் விசாக்களும் விரைவில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சீராக்கல் போன்ற காரணங்களால் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதியுடன் சிறிய அளவிலான விசாக்கள் மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடையை நீக்குவதன் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எந்த வகையிலும் குவைத் வருகைக்கான வழியை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் மற்ற GCC நாடுகளின் தாராளமயக் கொள்கையை இந்த விஷயத்தில் பின்பற்றவும் குவைத் நாட்டின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் ஆதாயங்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு விசிட்டிங் விசாக்களுக்கான கதவுகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.

அதேசமயம், மின்னணு இணைப்புத்துறையில் உள்துறை அமைச்சகம் செய்து சாதனை, டிஜிட்டல் வேலைகளுக்கான முன்னேற்றம் நாட்டுக்கு வருகின்ற பார்வையாளர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் என்பதை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் ஷேக் முகமது அல் சபா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டம் குடும்ப வருகை விசாக்களை தாராளமயமாக்கல் என்ற கண்ணோட்டதை நடைமுறை படுத்த காரணமாக அமைத்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | FamilyVisa | Kuwait Visit

Add your comments to Search results for Visit Visa

Wednesday, April 19, 2023

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

சவுதியில் இனிமுதல் விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Image : Saudi City

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

இதன்படி மே-1 முதல் சவுதியில் பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் மாதிரியிலான ஸ்டாம்பிங் செய்யப்படும் விசாவானது ரத்து செய்யப்படுகிறது. Work, Visit மற்றும் Resident விசாவில் சவுதி அரேபியாவிற்கு வருபவர்களுக்கு இனி QR கோடு பதிக்கப்பட்ட ஆவணத்தை(A4-தாளை) சரிபார்த்து விமான நிறுவனங்கள் பயண அனுமதி வழங்க வேண்டும் எனவும், சிவில் விமான போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவை தவிர அமீரகம், எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பாஸ்போர்ட்டிலும் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | Saudi Permit | Saudi Jobs

Add your comments to Search results for Visit Visa