இந்தியா,இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிடிங் விசாவில் நிபந்தனைகளுடன் துபாயில் நுழைய அனுமதி
Image credit: Fly Dubai
இந்தியர்கள் விசிட் விசாவில் துபாய் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது;விதிமுறைகள் பின்வருமாறு
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்கியிருந்தால் விசிட் விசாவில் துபாயில் நுழையலாம் என்று Fly Dubai விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இப்படி பயணம் மேற்கொண்டால் கடந்த இரண்டு வாரம் தங்கியிருந்த நாட்டின் அடிப்படையில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்படி பயணிக்கும் பயணிகளுக்கும் GDRFA ஒப்புதலும் கட்டாயமாகும். மேலும், புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவும் பயணத்தின் போது எடுத்துவர வேண்டும். பரிசோதனை தொடர்பான சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபியில் QR குறியீடு உள்ளதாக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவிற்கு வெளியே 14 நாட்கள் தங்கியிருப்பவர்கள் விசிட் விசாவில் துபாய்க்கு வரலாம் என்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் அறிவித்துள்ளது. பயணிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எமிரேட்ஸ் ட்விட்டரில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Dubai Visa | Visit Visa | Fly Dubai