BREAKING NEWS
latest

Uae Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Uae Visa செய்திகள், கட்டுரைகள், Uae Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, December 14, 2022

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

அமீரகத்தில் இருந்தவாறே அதை மீண்டும் 2 மாதங்களுக்கு புதுப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Uae

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

இந்த புதிய விதிமுறை அமீரகத்தின் துபாய் தவிர்த்து மற்ற எமிரேட்ஸ்களில் நேற்று(13/12/22) நடைமுறையில் வந்துள்ளது. இதன் காரணமாக அமீரகத்திற்கு 2 மாதகால Validity Visit விசாவில் வேலைக்காக செல்கின்ற நபர்கள், 2 மாதங்கள் முடியும் முன்னர் நிரந்தரமான வேலை கண்டுபிடித்து கம்பெனி விசாவுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த தினம் வரையில் 2 மாதங்களுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றாலும், அமீரகத்தை விட்டு வெளியேறாமல் அங்கிருந்து கொண்டே மேலும் 2 மாதங்களுக்கு Visit விசாவை புதுப்பிக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை ரத்து ஆகியுள்ளதால் அவர்கள் 2 மாதங்களுக்குள் வேலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் Exit அடித்து நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் தங்கியிருந்து மீண்டும் புதிய விசா அடித்து அமீரகத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

இது பெரும் பணச்செலவு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் எமிரேட்ஸில் இந்த சட்டம் ரத்து செய்யவில்லை என்றாலும் வரும் நாட்களில் துபாயை மட்டுமே குறிப்பிட்டு விசா பெற முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கும் புதிய சட்டம் நடைமுறையில் வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Visit Visa | Uae Visa | Renewal Stop |

Add your comments to Search results for Uae Visa

Monday, April 5, 2021

அமீரகத்தில் வேலைக்காக செல்வோர் இனிமுதல் ஏமாறாமல் தப்பிக்கலாம்,இந்த செய்தியை அதிகமாக பகிர்வு செய்து உதவுங்கள்

அமீரகத்தில் வேலைக்காக செல்வோர் இனிமுதல் ஏமாறாமல் தப்பிக்கலாம், விசா மோசடிக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது

அமீரகத்தில் வேலைக்காக செல்வோர் இனிமுதல் ஏமாறாமல் தப்பிக்கலாம்,இந்த செய்தியை அதிகமாக பகிர்வு செய்து உதவுங்கள்

அமீரகத்தில் உள்ள துபாய்,அபுதாபி உள்ளிட்ட பல எமிரேட்ஸில் உள்ள பிரபல கம்பெனிகளில் வேலை கிடைத்துள்ளது என்று நம்பி அதே கம்பெனிகளின் பெயரில் உண்மையான Offer letter என்று தோன்றும் அளவுக்கு போலியான letter பெற்று ஏமாறுவது தொடர்கதை ஆகின்றது. இதற்காக பல லட்சங்களை கொடுத்து விசா பெற்று பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்ட செய்திகளை பலர் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்வு செய்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை படிக்கின்ற அனைவரும் மற்றவர்களுக்கு இந்த செய்தியை பகிர்வு செய்து உதவுங்கள். வேலைக்காக முயற்சி செய்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த வசதிபற்றி தெரியாது. அதாவது நீங்கள் அமீரகத்தில் வேலைக்காக பெறுகின்ற Offer letter யின் உண்மை தன்மையை கண்டறிவது உள்ளிட்ட பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்திய தூதரகத்தின் கீழ் உள்ள PBSK உதவி மையத்தின் செயலி வழியாக சில நிமிடங்களில் பரிசோதனை செய்ய முடியும் என்று அதிகாரி சித்தார்த் குமார் பரேலி தெரிவித்தார். இதற்காக வேலைக்காக பெறுகின்ற Offer letter-ஐ நீங்கள் Pdf Format ஆக மாற்றி தயார் நிலையில் வைக்க வேண்டும். பின்னர் PBSK உதவி மையத்தின் செயலி உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்தபிறகு Job Offer Verification என்ற Option- யில் உங்கள் பெயர் விபரங்கள் உள்ளிடவை பதிவு செய்து அத்துடன் Pdf Format-யில் உள்ள Offer letter இணைத்து பதிவேற்ற வேண்டும், இதையடுத்து உடனையோ அல்லது ஓ‌ரிரு நாட்களிலோ உங்கள் Offer letter-யின் உண்மை தன்மையினை அதிகாரிகள் பரிசோதனை செய்து பதில் தருவார்கள் அதுவரையில் உங்களுக்கு வேலைக்காக ஏற்பாடு செய்கின்ற ஏஜென்சியில் உள்ள எந்தவொரு நபரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோல் Visa வின் உண்மை தன்மையினையும் அறிந்து கொள்ள முடியும். PBSK- செயலியை இங்கே Click செய்து Download செய்யலாம் Link:https://play.google.com/store/apps/details?id=com.pbsk

இதுபோல் அமீரகத்தில் வேலைக்காக வந்தபிறகு ஏற்படுகின்ற தொழில் பிரச்சனை, சட்ட உதவிகள், வேலை சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்காக PBSK-யில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட மேலும் பல வசதிகளை இந்த செயலி வழியாக பெற முடியும் என்று அதிகாரி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். கண்டிப்பாக இதை படிக்கின்ற ஒவ்வோரு அமீரக நண்பர்களும் இதை மற்றவர்களுக்கு பகிர்வு செய்யவும்.இதுபோல் Helpline எண்ணில் தொடர்பு கொண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் உதவியை பெற முடியும்.

Fake Offer Letter | Uae Visa | PBSK Check

Add your comments to Search results for Uae Visa

Saturday, January 30, 2021

அமீரகத்தில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை, புதிய சட்டம் அறிவித்தார் துபாய் ஆட்சியாளர்

அமீரகத்தில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை, புதிய சட்டம் அறிவித்தார் துபாய் ஆட்சியாளர்;இது தொடர்பான அறிவிப்பை அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

Image credit:UAE Official Soure

அமீரகத்தில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை, புதிய சட்டம் அறிவித்தார் துபாய் ஆட்சியாளர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளிநாட்டினருக்கான குடியுரிமைச் சட்டத்தை இன்று(30/01/21) அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிய குடியுரிமைச் சட்டம் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்களை இலக்காகக் கொண்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மற்றும் நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இதன் மூலம் குடியுரிமை கிடைக்கும்.இது தொடர்பாக சட்ட திருத்தங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுபோல் நாட்டின் அமைச்சரவை, உள்ளூர் நீதிமன்றங்கள், நிர்வாக சபைகள் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் தகுதியான வெளிநாட்டினரை கண்டறிந்து குடியிருமைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும், இப்படி குடியுரிமை பெறும் நபர்கள் தங்களுடைய சொந்த நாட்டின் தற்போதைய குடியுரிமையும் தொடர்ந்து வைத்திருக்க இந்த சட்டம் வழிவகை செய்யும் எனவும் ஆட்சியாளர் விளக்கியுள்ளனர். எனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொடர்ந்து உள்ள வளர்ச்சி பயணத்திற்கு வழிவகுக்கும் திறமையான நபர்களை நாட்டிற்கு அதிகம் ஈர்ப்பதே புதிய சட்டத்தின் குறிக்கோள் என்று தெரிகிறது.

துபாயில் உலக வர்த்தக கண்காட்சி அக்டோபரில்,2021 தொடங்கயிருக்கும் நிலையில் வெளிநாட்டினரின் குடியுரிமை தொடர்பான புதிய சட்டத்திருத்தம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக அமீரகம் வெளிநாட்டினருக்கான 10 ஆண்டுகளாக தங்க விசாவையும்(Golden Visa) அறிமுகப்படுத்தியிருந்தது.மேலும் இன்று அறிவிக்கப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பான விரிவான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Add your comments to Search results for Uae Visa

Tuesday, August 3, 2021

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

அமீரகத்தில் ஆகஸ்டு-5 முதல் வெளிநாட்டினர் நுழைய சற்றுமுன் அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது

Image credit: Emirates Airlines

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட்-5,2021 முதல் அதாவது நாளை மறுநாள் முதல் Uae Validity Work Permit(குடியிருப்பாளர்) உள்ளவர்கள் அனைவருமே நிபந்தனைகள் பின்பற்றி வரலாம் என்று நாட்டின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் மற்றும் தேசிய அவசரநிலை நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையமும் இன்று(03/08/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல்- 24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று தடை நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் அமீரகத்தில் நுழைய முடியாமல் நிலவிவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பின்வரும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகள் மீதான தடையினை நீக்கியுள்ளாதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி ஆகஸ்டு-5,2021 முதல் அமீரகத்தில் நுழைய நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. Validity Work Permit  உள்ள நபராக இருக்க வேண்டும்(இ‌வ்வளவு நாட்களுக்குள் Validity விசா உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை, 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் கடந்தவர்கள் வரலமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் அதனால் இந்த விளக்கம்)
  2. அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், அதவாது இர‌ண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்தவராக இருக்க  வேண்டும். இந்தியாவின் கோவிட்சீல்ட் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.
  3. துபாயில் வசிக்கின்றவர்கள் என்றால்  ICA தளத்தில் பதிவு செய்தும், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்களில் வசிப்பவர்கள் GDRFAD தளத்தில் பதிவு செய்து அதிகாரிகளிடம் புறப்படுவதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். 
  4. இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் QR-CODE உடன், உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதை பயணத்தின் போது உங்கள் கைவசம் வைத்திருக்கவும் வேண்டும்.
  5. முன்னர் அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட PCR Test Negative சான்றிதழ் மற்றும் புறப்படும் விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் Rapid Test எடுத்துக்கொண்ட Negative சான்றிதழ் ஆகியவையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  6. அமீரக விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, விமான நிலையத்தில் வைத்து மற்றொரு PCR பரிசோதனை மீண்டும்  குடியிருப்பாளருக்கு நடத்தப்படும்(பரிசோதனை முடிவு வெளிவர 12 மணிநேரம் முதல் ஒரு நாட்கள் வரையில் ஆகலாம், சில நேரங்களில் அதுவரையில் Self Quarantine இருக்க வேண்டியது இருக்கும்)
  7. உங்கள் விசா காலாவதி பற்றி சந்தேகம் உள்ளவர்களுக்கான பதில். நாளைய தினம் உங்கள் விசா முடிகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் இன்றைய தினம் வரையில் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி அமீரகத்திற்கு பயணிக்க முடியு‌ம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
  8. இதுபோல் Visit Visa வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலும்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேநேரத்தில் அமீரகத்தில் பணிபுரியும் கீழ் குறிபிட்ட பிரிவினர்கள் மட்டும் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி வரலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை செய்கின்ற தொழில்நுட்ப(டெக்னீசியன்கள்) வல்லுநர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப வாய்ப்புள்ள நபர்கள் ஆனால் இவர்களிடம் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி இருக்க வேண்டும், பெடரல் மற்றும் Local Government Agencies யில் பணிபுரிபவர்களும் நாடு திரும்பலாம். அதேபோல் துபாயில் எக்ஸ்போ 2020 யின் பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பான்சர்கள் ஆகியோருக்கும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Uae Visa