குவைத் உள்துறை காலாவதியான விசாக்கள் உள்ளவர்கள் நவம்பர் 30- க்கு முன்னர் குவைத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்:
நவம்பர்-9,2020
குவைத் உள்துறை அமைச்சகம் இன்று திங்கட்கிழமை(09/11/2020) மாலையில் வெளியிட்ட அதிகாரபூர்வ செய்தியில் தற்போது குவைத்தில் உள்ள அனைத்து வகையான வேலை தொடர்பான நுழைவு விசா(Enter Visa) வைத்திருப்பவர்கள் மற்றும் அனைத்து வகையான வருகை விசா(Visit Visa) வைத்திருப்பவர்களும் நவம்பர் 30-க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.
கொரோனா பிரச்சினை காரணமாக முன்னர் நுழைவு விசா(Enter Visa) மற்றும் வருகை விசா(Visit Visa) விசாவில் குவைத்தில் வந்திருந்த நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட்-31 வரையில் Auto Renewal மூலம் உள்துறை அமைச்சகம் விசா புதுப்பித்தல் செய்து வழங்கியது, அதையடுத்து மீண்டும் 3 மாதங்களுக்கு புதுப்பித்தல் செய்து வழங்கியது. அதாவது வருகிற நவம்பர்-30 வரையில் செல்லுபடியாகும். இதையடுத்து அவர்கள் இனி எந்த சட்ட சலுகைகளையும் பெற முடியாது எனவும். இதற்கு காரணம் இந்த கால இடைவெளியில் இப்படிப்பட்ட நபர்கள் தங்கள் தற்காலிக விசாகளை வேலை விசாக்களாக( Permanent Visa) மாற்ற அதிகாரிகள் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளனர் என்று அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் ஸ்பான்சர்கள்(நிறுவன உரிமையாளர்கள்) மற்றும் முதலாளிகள்(அரபிகள்) நவம்பர்-30 ற்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ தளத்தில் https://www.moi.gov.kw/main/ -யில் நீங்கள் வேலைக்கு அழைத்து வந்துள்ள நபர்களின் தற்காலிக விசாவை தொழில் விசாக்களாக புதுப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் இப்படி புதுப்பித்தல் செய்ய முடியாத விசாகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் மூலம் மறுஆய்வு செய்வதன் மூலமாகவோ விசாகளை புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள நவம்பர் 30-ஆம் தேதி காலக்கெடு முடிந்த பிறகு காலாவதியான விசா உள்ள நபர்களுக்கு எதிராக அனைத்து சட்ட நடைமுறைகளை தொடங்குவதாகவும், அவர்கள் சட்டத்தை மீறியவர்களாக கருதி நாடு கடத்தப்படும் எனவும்.அதுவும் அவர்கள் திருப்பி குவைத் வரமுடியாதபடி Finger வைத்து அனுப்பப்படும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.
Editor: Ktpnews Official