BREAKING NEWS
latest

Kuwait PAM - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait PAM செய்திகள், கட்டுரைகள், Kuwait PAM புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, January 20, 2021

குவைத்தில் விசா புதுப்பித்தல் மீண்டும் துவங்கப்பட்டதா,இங்கு வேலை செய்யும் பல உறவுகள் கேள்விக்கான பதில்

குவைத்தில் விசா புதுப்பித்தல் தொடர்பான சேவைகள் மீண்டும் துவங்கியது PAM அறிவப்பு

குவைத்தில் விசா புதுப்பித்தல் மீண்டும் துவங்கப்பட்டதா,இங்கு வேலை செய்யும் பல உறவுகள் கேள்விக்கான பதில்

குவைத்தில் பணி அனுமதி பத்திரங்கள்(Work Permit) புதுப்பிப்பதை ஜனவரி 1,2021 முதல் ஜனவரி 11,2021 வரை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அமைச்சகத்தின் சேவைகள் புதிய தானியங்கி ஆன்லைன் அமைப்பாக மாற்றப்பட்டுவதன் ஒரு பகுதியாக இந்த முடிவு என்று சம்பந்தப்பட்ட துறை செய்திக்குறிப்பில் அறிவித்திருந்தது.

இதையடுத்து குவைத்தின் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சகம்(PAM) புதிய ஆன்லைன் அமைப்புகள் வழியாக தனது சேவைகள் ஜனவரி 12-ஆம் தேதி முதல் மீண்டும் தொங்கிய நிலையில் முதல் ஏழு வேலை நாட்களில் 25,565 சேவைகள் வழங்கியுள்ளது என்று உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, புதிய ஆன்லைன் வலைத்தளம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில், 1774 வெளிநாட்டவர் பணி அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டது, மேலும் தொழிலாளர்கள் இறந்ததால் 127 தொழிலாளர்களின் பணி அனுமதி பாத்திரங்களும் ரத்தாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் இந்த 7 நாட்களில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களின் பணி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்காமல் இருந்த காரணத்தால் 561 பணி அனுமதி பத்திரங்கள்(Work Permit) காலாவதியானது எனவும், மேலும் இந்த நாட்களில் 10,461 வெளிநாட்டினர் தங்கள் பணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆன்லைன் முறையைத் தொடங்கியுள்ளதன் நோக்கம், நாட்டில் மக்கள் எளிதாக சேவைகளை பெறும் வகையில் பல்வேறு வகையான ஆன்லைன் சேவைகளை படிப்படியாகத் தொடங்குவதற்கான ஒரு முயற்சியாகும் என்று Public Authority for Manpower(PAM) கூறியது,மேலும் இந்த புதிய ஆன்லைன் சேவை மூலம் வணிக உரிமையாளர்களை பரிவர்த்தனைகள் செய்யவும், வலைத்தளத்தின் மூலம் மட்டும் உரிமையாளர்கள் தங்கள் கேள்விகளை அனுப்பவும் சம்பந்தப்பட்ட துறை அறிவுறுத்தியுள்ளது.

Kuwait Work Permit | Renewal Starting | Kuwait PAM

Add your comments to Search results for Kuwait PAM

Saturday, January 16, 2021

குவைத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் விசா புதுப்பிக்க கல்வித்தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்


(Kuwait Manpower Authority Building)

குவைத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான பணி அனுமதிப்பத்திரங்களை(விசா) புதுப்பிப்பதற்கான கல்வித் தகுதிகளும் பரிசீலிக்கப்படுவதாக அல்-கபாஸ் தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான நிபந்தனையாக கல்வித் தகுதிகளின் முக்கியத்தத்தை,தொழிலாளர்களின் கல்வித் தகுதி குறித்த தேவையையும் மனிதவளத்திற்கான பொது ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கீகாரம் பெற்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆஷால் ஆன்லைன் செயலி மூலம் Sponsore(முதலாளிகள்) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

அதே நேரத்தில் குவைத் உள்ள சொசைட்டி ஆஃப் இன்ஜினியரிங் துறையில் இருந்தோ அல்லது சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ உரிமம் அலுவலகத்தில் இருந்தோ அங்கீகாரச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அவர்களின் கல்வித் தகுதிகளை நிரூபிக்க வேண்டிய இந்த புதிய உத்தரவில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட சான்றிதழ் பெறாத பிரிவுகளில் உள்ள நபர்களின் விசாகளை ஆஷால் ஆன்லைன் முறை மூலம் புதுப்பித்தல் செய்யும் நேரத்தில் தொழிலாளர்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்களில் எதாவது ஒரு நகலை Business செய்யும் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனம் நடத்தும் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visa Renewal | Sumited Certificates | Kuwait PAM

Add your comments to Search results for Kuwait PAM

Thursday, June 27, 2019

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் நீங்கள் தொழில்மாற்றம் பெற வேண்டுமா.......???? தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய நிபந்தனை அறிவிப்பு:

குவைத்தில் அடுத்த வருடம் 2020 முதல் வெளிநாட்டு தொழிலாளர்கள்(நாம்) வேலை மாற்றம்(தொழில் மாற்றம்) பெறுவதற்கு தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறையில் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் முதல்கட்டமாக 20 வகையான துறைகளில் வேலை மாற்றம் பெறுவதற்கு இந்த தகுதி தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம்-அல்-அகீல் குவைத் பிரபல பத்திரிக்கை Al-Qabas அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை மேற்கொள் காட்டி குவைத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளது.

மனிதகடத்தல்(சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை அழைத்து வருவது) மற்றும் விசா வியாபாரம் ஆகியவற்றை தடுக்க வேண்டியே இந்த புதிய விதிமுறை நடைமுறையில் கொண்டுவருவதற்கு Public Authority for Manpower (PAM) (பொது மனிதவள ஆணையம்) முடிவு செய்துள்ளது. தற்போது தகுதியில்லாத பலருக்கு பல்வேறு துறைகளில் வேலை பெறுவதற்கு 1500 குவைத் தினார் வரையில் பெற்றுக்கொண்டு விசாவை வியாபாரமாக இடை தரகர்கள் மற்றும் போலியான ஏஜென்சிகள் அப்பாவிகளை ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள் என்றும் இதை முற்றிலும் இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றும்,தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக வேலை மாற்றம் பெறுவதற்கு தகுதி தேர்வு எழுதவேண்டிய 20 பிரிவுகள் விபரங்கள் பின்வருமாறு:

1)Car mechanics

2)EAlectricians

3) Security supervisors

4) Safety supervisors

5) Sanitary workers

6) Technical surveyors

7) Aluminum technicians

8) Welders

9) Lathe technicians

10) Advertising agents

11) Sales representatives

12) Irrigation technicians

13) Steel fixers

14) Carpenters

15) Construction carpenters

16) Asphalt laboratory technician

17) Purchasing officers

18) Accountants

19) Librarians

20) Legal counsels மற்றும்

21) Legal clerks  ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் குவைத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளி பல்கலைக்கழகம் வழங்கியுள்ள சான்றிதழ்கள் அடிப்படையில்
தன்னுடைய கல்வி தகுதி தொடர்பான மாற்றங்கள் வேலைக்காக மாற்ற வேண்டும் என்றால் தற்போது செய்யும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாயகம் சென்றுவிட்டு,கல்வித் தகுதியின் அடிப்படையில் புதிய விசாவில் குவைத்திற்கு மீண்டும் வேலைக்கு தாராளமாக வரலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்


Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait PAM