BREAKING NEWS
latest

New Fees - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் New Fees செய்திகள், கட்டுரைகள், New Fees புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, September 24, 2024

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது

Image : புதிய கட்டணம் வசூலிக்கப்பட்ட ரசீது

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

குவைத்துக்கான விசா ஸ்டாம்பிங் செயல்முறைக்கு முன்னால் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை கட்டணம் 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 4500 ஆக இருந்தது. புதிய கட்டணம் கடந்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. மேலும் கடந்த வாரம் முதல் மருத்துவ பரிசோதனை செய்தவர்களிடம் இருந்து புதிய கட்டணத்தின்படி தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குவைத் சட்டப்படி கட்டணத்தை உயர்த்தும் போது குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது விதிமுறை ஆகும். ஆனால் அமைச்சகம் அப்படியொரு புதிய கட்டண உயர்வு தொடர்பான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. குவைத்துக்கு விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு முன் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் 70 சதவீதம் பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பரவலான புகார்களும் நிலுவையில் உள்ளன.

இதில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள சில மருத்துவ பரிசோதனை மையங்கள் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு சட்டவிரோதமாக 35,000 முதல் 70,000 வரையில் வாங்கி கொண்டு மருத்துவ தகுதி சான்றிதழ்களை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படும் நபர்கள் முன்கூட்டி கட்டணம் செலுத்தினாலும், அதில் குறிப்பிட்ட சதவீதம் தொகையாவது திரும்ப வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுவது இல்லை, இதற்கிடையே இந்த மருத்துவ சோதனைக்கட்டணம் மீண்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகுறித்து குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | New Fees

Add your comments to Search results for New Fees