குவைத்தில் கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் புதிய மையங்கள் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Image credit : உள்துறை அமைச்சகம்
பயோமெட்ரிக் கைரேகை சேகரிப்பு தொடர்கிறது தாயகம் செல்ல தேவையில்லை திரும்பும் போது கட்டாயம்
குவைத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்(வெளிநாட்டினர்) பயோமெட்ரிக் கைரேகைகளை சேகரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைரேகையை எடுக்காமல் குவைத்தை விட்டு வெளியேறலாம், ஆனால் திரும்பும் போது இது கட்டாயம்(விமான நிலையத்தில் எடுக்கப்படும்) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் இதற்காக புதிய மையங்கள் திறக்கப்படும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் புதிய நுட்பத்தை புகுத்துவதற்கும் கைரேகை சேகரிப்பது தானியங்கி முறையில் செயல்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நாட்டிற்குள் நுழைபவர்களின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும். நாட்டின் குடிமக்கள், வளைகுடா நாடுகளை சேர்ந்த குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்(வெளிநாட்டினர்) இந்த நோக்கத்திற்காக இயங்கி வருகின்ற மையங்களுக்குச் சென்று தகவல் கொடுக்கலாம்.
குவைத்திகள் மற்றும் GCC நாட்டினருக்கு ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மதி, ஜஹ்ரா மற்றும் முபாரக் அல் கபீர் ஆகிய இடங்களுக்கு சென்று தகவல்களை வழங்கலாம். அலி சபா அல் சலாம் பகுதியிலுள்ள அடையாளம் எடுக்கும் மையம்(Identification Centre) மற்றும் ஜஹ்ராவில் உள்ள அடையாளம் எடுக்கும் மையம் ஆகிய இரண்டு மையங்கள் வெளிநாட்டவர்களுக்காக இயங்குகின்றன. இவை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்று பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு(செல்வதற்கான அனுமதி) META இணைய தளம் அல்லது உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே எடுக்க வேண்டும். இதற்கிடையில், பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்ய மேலும் ஐந்து மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 360 மால், அவென்யூஸ், அல் அசிமா மால், அல் குட் போன்ற வணிக வளாகங்களிலும் உள்துறை அமைச்சக வளாகத்திலும் புதிய பயோமெட்ரிக் கைரேகை மையங்கள் திறக்கப்படும். புதிய மையங்களில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் முன் அனுமதி இல்லாமல் பயோமெட்ரிக் கைரேகைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BioMatric Scan | Kuwait Travelling | Kuwait Arrival