BREAKING NEWS
latest

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

« PREV
NEXT »