குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது
Image : Kuwait Airport
குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது
வெளிநாட்டினருக்கு குடும்ப விசிட் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்த முடிவு பிப்ரவரி-7,2024 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். METTA தளத்தின் மூலம் விசா பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாகும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விசிட் விசா பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் 400 தினார் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 800 தினார் சம்பளம் உள்ளவர்களுக்கு, மற்ற உறவினர்கள் (சகோதரர்கள், மனைவியின் தாய் தந்தை, மனைவி/உடன்பிறப்புகள்) ஆகியோருக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குவைத்திற்கு சொந்தமான எதாவது ஒரு தேசிய விமான நிறுவனத்தில் விசிட் வந்தவர்கள் வருவதற்கும், திரும்ப செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து கொண்டு மட்டுமே நாட்டை(குவைத்தை) அடைய வேண்டும். மேலும் விசிட் விசாவை வசிப்பிட(Residence Permit) விசாவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.
மேலும் விசிட் வந்துள்ள நேரத்தில் எதாவது காரணத்தால் சிகிச்சை தேவை என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். விசிட் விசா காலம் முடிந்தும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசிட் வந்த நபர் மற்றும் அவருக்கு விசா எடுத்த ஸ்பான்சர் ஆகியோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்டவை மற்ற நிபந்தனைகள் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Visit Visa | Kuwait Visa | Visit Kuwait