குவைத்தில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
Image : Al Mutlaa பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி
குவைத்தில் இன்று ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது
குவைத் முழுவதும் இன்று(11/02/24) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளில் பலத்த மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் நாட்டின் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதனுடன் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், இதன் விளைவாக கடலோர கரையோரத்தில் 7அடிக்கு மேல் அலைகள் உயரும் மற்றும் தெரிவுநிலை குறைவு ஏற்படலாம். 15 மணி நேரம் நீடிக்கும் இந்த வானிலை எச்சரிக்கை இரவு ஒன்பது மணிக்கு முடிவடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ள இருந்த நிலையில் இந்த அறிவிப்பை வானிலை மையம் இன்று மீட்டும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து குவைத் உள்துறை அமைச்சகம் எந்தவிதமான அவசரகால உதவிக்கும் நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் 112 என்ற எண்ணில் அழைக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளது. குவைத் மட்டுமன்றி சவுதி, ஓமன், அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கும் இதை வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒமானில் பெரும்பாலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Weather | Today Weather | Weather Report