குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி இனிமுதல் 5 வருடங்களாக இருக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : குவைத் ஓட்டுநர் உரிமத்தின் மாதிரி புகைப்படம்
குவைத்தில் வெளிநாட்டினர் ஓட்டுநர் உரிமத்தின் காலாவதி 5 வருடங்கள் என்பது உள்ளிட்ட திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது
குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 425/2025 மற்றும் 76/1981 இன் கீழ் உள்ள பிரிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவைத் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டு திருத்தப்பட்ட புதிய சட்டம் இன்று(23/03/25) ஞாயிறுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
புதிய சட்டத்தின்படி பல்வேறு வகையான ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும்(காலாவதி) காலம் மற்றும் பயன்பாட்டு வரம்புகள் மாறும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் புதிய சட்டப்படி 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டப்படி ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவரின் குடியிருப்பு அனுமதியின்(விசா காலவதியை) கால அளவை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டினருக்கு இவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த சட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டு 5 வருடங்களாக காலவதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், குடிமக்களுக்கு 15 ஆண்டுகளும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(பிதூனி) தங்களுடைய அடையாள அட்டையின் காலாவதி அடிப்படையிலும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும். மேலும் தற்போது ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படும் என்றும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Minister | Kuwait License | Indian Worker