BREAKING NEWS
latest

Sunday, July 16, 2023

பயோமெட்ரிக் கைரேகை சேகரிப்பு தொடர்கிறது தாயகம் செல்ல தேவையில்லை திரும்பும் போது கட்டாயம்

குவைத்தில் கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் புதிய மையங்கள் திறக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Image credit : உள்துறை அமைச்சகம்

பயோமெட்ரிக் கைரேகை சேகரிப்பு தொடர்கிறது தாயகம் செல்ல தேவையில்லை திரும்பும் போது கட்டாயம்

குவைத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்(வெளிநாட்டினர்) பயோமெட்ரிக் கைரேகைகளை சேகரிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கைரேகையை எடுக்காமல் குவைத்தை விட்டு வெளியேறலாம், ஆனால் திரும்பும் போது இது கட்டாயம்(விமான நிலையத்தில் எடுக்கப்படும்) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைரேகை சேகரிப்பதற்காக வணிக வளாகங்கள் மற்றும் அமைச்சக வளாகங்களில் இதற்காக புதிய மையங்கள் திறக்கப்படும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் புதிய நுட்பத்தை புகுத்துவதற்கும் கைரேகை சேகரிப்பது தானியங்கி முறையில் செயல்படுகின்றன. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நாட்டிற்குள் நுழைபவர்களின் அடையாளத்தை எளிதாக சரிபார்க்க முடியும். நாட்டின் குடிமக்கள், வ‌ளைகுடா நாடுகளை சேர்ந்த குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்(வெளிநாட்டினர்) இந்த நோக்கத்திற்காக இயங்கி வருகின்ற மையங்களுக்குச் சென்று தகவல் கொடுக்கலாம்.

குவைத்திகள் மற்றும் GCC நாட்டினருக்கு ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மதி, ஜஹ்ரா மற்றும் முபாரக் அல் கபீர் ஆகிய இடங்களுக்கு சென்று தகவல்களை வழங்கலாம். அலி சபா அல் சலாம் பகுதியிலுள்ள அடையாளம் எடுக்கும் மையம்(Identification Centre) மற்றும் ஜஹ்ராவில் உள்ள அடையாளம் எடுக்கும் மையம் ஆகிய இரண்டு மையங்கள் வெளிநாட்டவர்களுக்காக இயங்குகின்றன. இவை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்று பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் முன்பதிவு(செல்வதற்கான அனுமதி) META இணைய தளம் அல்லது உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே எடுக்க வேண்டும். இதற்கிடையில், பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்ய மேலும் ஐந்து மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 360 மால், அவென்யூஸ், அல் அசிமா மால், அல் குட் போன்ற வணிக வளாகங்களிலும் உள்துறை அமைச்சக வளாகத்திலும் புதிய பயோமெட்ரிக் கைரேகை மையங்கள் திறக்கப்படும். புதிய மையங்களில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் முன் அனுமதி இல்லாமல் பயோமெட்ரிக் கைரேகைகளை எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BioMatric Scan | Kuwait Travelling | Kuwait Arrival

Add your comments to

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Image : தீயிணை அணைக்கும் காட்சி

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்-ஹஸ்ஸாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் நேற்று(14/07/23) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பட்டறையில் வேலை செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அடையாளம் காணப்பட்ட 5 இந்தியர்களில் ஒருவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நெடுமங்காடு அடுத்த அழிக்கோடு அருகே வசித்து வந்த அஜ்மல் ஷாஜகான் என்கிற நிஜாம் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேர் இந்தியாவில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல் இருவர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. கார் பணிமனையில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பட்டறைக்கு மேலே வசித்தவர்கள். உடல்கள் அல் ஹாசா சென்டரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

Saudi Arabia | Fire Accident | Indians Died

Add your comments to

Saturday, July 8, 2023

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத்தில் போலியான முறையில் ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர்

Image : கைதான நபர்கள்

குவைத்தில் இன்று 33 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை போலி ஆவணங்கள் தயார் செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்தனர்

குவைத் கிரிமினல் செக்யூரிட்டி பிரிவினர் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து போலியான முறையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தயாரித்த பிலிப்பைன்ஸ் கிரிமினல் கும்பலை கைது செய்துள்ளனர், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியுடன் 33 பிலிப்பைன்ஸ் நபர்களை கைது செய்துள்ளது

இவர்கள் கல்விச் சான்றிதழ்கள், திருமண ஒப்பந்தங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை போலியாக உருவாக்கி, இந்த மோசடி ஆவணங்கள் குடியுரிமை நிலையை மாற்றுதல் மற்றும் விசா தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கண்டறிந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் மற்றும் மீறல்கள் செய்யும் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளது

Phillipines Arrested | Fraudulent Documents | Kuwait Police

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Monday, July 3, 2023

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் தேர்வுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த முடிவு

அமீரகத்தை போல் குவைத்திலும் ஓட்டுநர் உரிமம் தேர்வுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தும் முடிவு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Image :Kuwait Road

குவைத்தில் ஓட்டுநர் உரிமம் தேர்வுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த முடிவு

குவைத்திலும் அமீரகத்தை போல் ஓட்டுநர் உரிமம் தேர்வுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த முடிவு. கேப்பிட்டல் கவர்னரேட் உரிமம் வழங்கல் துறையின் தலைவர் பிரிகேடியர் அப்துல் வஹாப் அல் உமர் இதனைத் தெளிவுபடுத்தினார். அடுத்த ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.ஒரு நபர் புதிய ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற முதல் ஒரு ஆண்டில் ஏதேனும் சாலை விபத்துகள் செய்யும் பட்சத்தில், ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெற அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.

இதை அமல் படுத்துவதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் ஆண்டுக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் மட்டுமே வழங்குவது குறித்து யோசிப்பதாகவும் அவர் கூறினார். தலைநகர் போக்குவரத்து துறையுடன் இணைந்து, குடிமக்கள் மற்றும் வீட்டு ஓட்டுநர்களுக்காக பிரத்யேகமாக புதிய ஓட்டுநர் உரிமப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதே மாதிரி மற்ற கவர்னரேட்டிலும் புதிய பிரிவு உடனடியாக தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Kuwait Road | Kuwait License | New Rule

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

குவைத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்

குவைத் தொழிலாளர் சந்தையில் உள்ள மொத்த பணியாளர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Image:Indian Community

குவைத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்

குவைத் தொழிலாளர் சந்தையில் உள்ள மொத்த பணியாளர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் என தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிட்டுள்ள தகவல்படி 1,45,000 பெண்கள் மற்றும் 7,12,000 ஆண்கள் உட்பட மொத்தம் 8,57,000 இந்தியர்கள் நாட்டில் பணிபுரிகின்றனர். நாட்டின் தொழிலாளர் சந்தையில் மொத்தம் இருபத்தி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 23,000 இந்தியத் தொழிலாளர்கள் புதிதாக தொழிலாளர் சந்தையில் நுழைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 2022 இறுதி நிலவரப்படி, குவைத் தொழிலாளர் சந்தையில் 8,34,678 இந்தியர்கள் உள்ளனர்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் ,இரண்டாவது பெரிய தொழிலாளர் சக்தியாக உள்ளனர். குவைத்தில் நான்கு லட்சத்து எண்பத்தாறாயிரம் எகிப்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சற்று பின்னால் நான்கு லட்சத்தி நாற்பத்து நாலாயிரம் பேர்களும் குடிமக்கள்(குவைத் குடிமக்கள்) 3வது இடத்தில் வேலை செய்து வருகின்றனர். மேலும் நாட்டில் வேலை செய்கின்ற அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 4வது இடத்திலும், வங்கதேசம் 5வது இடத்திலும், இலங்கை 6வது இடத்திலும் உள்ளது. குவைத் தொழிலாளர் சந்தையில் பணிபுரியும் பிற நாடுகளின் நிலவரம் நேபாளம் 7-வது இடத்திலும்), பாகிஸ்தான் 8-வது இடத்திலும், சிரியா 9-வது இடத்திலும், ஜோர்டான் 10-வது இடத்திலும் உள்ளனர்.

Add your comments to

Wednesday, May 31, 2023

சவுதியில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு

சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை வரும் ஞாயிறு முதல் போக்குவரத்து கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் கண்காணிக்க முடிவு என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

Image : சவுதி சாலை

சவுதியில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு

சவுதி அரேபியாவில் புதிதாக மேலும் ஏழு விதிமீறல்களை போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு. வரும் ஞாயிறு முதல் கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் இவை கண்காணிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் லெப்.ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி தெரிவித்தார்.

மஞ்சள் கோடுகளுக்கு அப்பால் சாலை ஓரங்களில் உள்ள இடங்கள், நடைபாதைகளிலும், வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்ட பாதைகளிலும் வாகனங்கள் ஓட்டுவது, இரவு நேரங்களிலும், வானிலை மாற்றம் காரணமாக பார்வையை குறைக்கும் நேரங்களில் வாகனத்தின் விளக்குகளை எரிய விடாமல் இருப்பது, டிரக்குகள் மற்றும் கனரக வாகனங்கள் இரட்டைப் பாதையின் வலதுபுறத்தில் ஒட்டி செல்லாமல் இருப்பது, பொதுச் சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை மதிக்காமல் இருப்பது, சேதமடைந்த அல்லது புரிந்துகொள்ள முடியாத எண் கொண்ட நம்பர் பிளேட்டுடன் வாகனம் ஓட்டுதல், பார்க்கிங் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், தானியங்கி கேமராக்கள் வாகனங்களின் எடை மற்றும் அளவையும் பதிவு செய்யும் மற்றும் சோதனைச் சாவடிகளில் நிற்காதது ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் கண்காணிப்பு கேமராக்களுடன் போக்குவரத்து போலீஸ் மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் புதிதாக சேர்க்கப்பட்ட விதிமீறல்கள் கண்காணிக்கப்படும். பாதுகாப்பான வாகன போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் வாகன விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி அவர் மேலும் கூறினார்.

Add your comments to

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்க முடிவு

Image : முருங்கை நாற்றுகள் வினியோகம்

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை மரம் வளர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது

குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை சாகுபடி என்ற தேசிய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பத்தாயிரம் முருங்கை நாற்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தின் மூலம் 40,000 மரக்கன்றுகள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்குப் பகுதிகளில் வளர்க்கப்படும் முருங்கை நாற்றுகளே இவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன

மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சித் தலைவர் பாத்திமா அல்-கைத் தெரிவித்தார். நாட்டின் ஆறு கவர்னரேட்டுகளில் அமைந்துள்ள முப்பத்தைந்து ஜமியாக்கள் மூலம் நாற்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. moringakuwait.com என்ற இணையதளம் மூலம் முருங்கையின் மருத்துவ குணங்கள் மற்றும் முருங்கை தொடர்பான சமீபத்திய ஆய்வுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்றும் தலைவர் விளக்கம் அளித்தார்.

Add your comments to

Tuesday, May 30, 2023

குவைத்தில் இந்திய பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்தார்

குவைத்தில் இந்திய பெண்மணி ஒருவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image credit: மரணமடைந்த பீரீதா(வயது-47)

குவைத்தில் இந்திய பெண்மணி மாரடைப்பால் மரணமடைந்தார்

குவைத்தில் இந்திய பெண்மணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி இன்று(30/05/23) செவ்வாய்கிழமை வெளியாகியுள்ளது. மரணமடைந்த பெண்மணியின் பெயர் ப்ரீதா(வயது-47). தன்னுடைய குடியிருப்பில் வைத்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீதா இந்தியா கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த விதுரா பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இவருடைய கணவர் பெயர் லாலிச்சன், இவர்களுக்கு ஆலன் மற்றும் அமல் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சட்ட நடவடிக்கை முடித்த உடலை தாயகம் கொண்டு செல்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்த ப்ரீதா குவைத்திலுள்ள அமிரி மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add your comments to

Monday, May 29, 2023

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பதாக சவுதி தூதரகம் ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது

Image credit: கைரேகை பதிவு VFS மையம்

சவுதியில் பணி விசாவில் செல்லும் நபர்கள் கைரேகை வழங்குவது கட்டாயம் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது

சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக செல்வோருக்கு பணி விசா வழங்க கைரேகை கட்டாயம் என்ற விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விசா விண்ணப்பிப்பவர்கள் விஎப்எஸ் மையத்துக்குச் சென்று கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக கடந்த 23-ஆம் தேதி சவுதி துணைத் தூதரகம் தெரிவித்திருந்தது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு(அதாவது நேற்று இரவு) சவுதி தூதரகம் தற்காலிக முடக்கம் குறித்து ஏஜென்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

மேலும்அதில் ஜூன்-28,2023, ஈத்-உல்-அதா(தியாகத் திருநாள்) வரை அறிவிக்கப்பட்ட சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும், பண்டிகை விடுமுறைக்குப் பிறகு தூதரகம் செயல்படத் தொடங்கும் போது இது பற்றிய கூடுதல் தகவல்கள் தெளிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், விசிட் விசாவுக்கு விஎப்எஸ் மையத்திற்குச் சென்று கைரேகைகளை வழங்க இம்மாத தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சட்டம் தொடரும். இது தொடர்பாக சவுதி தூதரகத்திடம் இருந்து எந்த புதிய தகவலும் இல்லை. பணி விசா முத்திரை பதிக்க விண்ணப்பதாரர் கைரேகை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முடிவும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Add your comments to

குவைத்திலிருந்து வெளியேற பயோ-மெட்ரிக் பதிவு கட்டாயமில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

குவைத்திலிருந்து வெளியேற பயோ-மெட்ரிக் பதிவு கட்டாயமில்லை என்று பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image credit : கைரேகை பதிவு

குவைத்திலிருந்து வெளியேற பயோ-மெட்ரிக் பதிவு கட்டாயமில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

குடிமக்களும் குடியிருப்பாளர்களும் பயோ-மெட்ரிக் ஸ்கேன் எடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர்கள் நாடு திரும்பிய பிறகு அதைச் செய்யலாம் என்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சகம் மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

மேலும் அல்-ஜஹ்ரா, அலி சபா அல்-சேலம் மற்றும்வெஸ்ட் மிஷ்ரெஃப் ஆகிய இடங்களில் 24 மணிநேரமும், ஃபர்வானியாவில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும் ஒரு மையமும் உட்பட நான்கு மையங்கள் ஸ்கேன்(பயோ-மெட்ரிக் அடையாளம்) எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளன.'மெட்டா' ஆன்லைன் தளம் வழியாக அனுமதி கேட்டு முன்பதிவு(அப்பாயிண்ட்மெண்ட்) செய்யலாம் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Add your comments to