குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
Image : குவைத் ஏ.டி.எம் மையம்
குவைத்தில் சிவில் ஐடி காலாவதியாகும் முறைக்கு வங்கி கணக்குகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை நேரிட கூடும்
குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து(Automatically) ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளின் ஒரு பகுதியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் சேவைக்குப் பிந்தைய சலுகைகள், விசா மற்றும் மாஸ்டர் கார்டு சேவைகளும் அடங்கும். உதாரணமாக முன்பு தினசரி பணம் திரும்பப் பெறும் வரம்பு 2000 தினார்களாக இருந்தது, ஆனால் இதுபோன்ற சமயங்களில் அது 500 தினார்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே கடனுக்காக நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு வங்கியில் கடன் பெற ஒப்புதல் பெறப்பட்டாலும், சிவில் ஐடி காலாவதியானால் அவை ரத்து செய்யப்படும். இந்த நடைமுறை வெளிநாட்டவர்களுக்கும், குடிமக்களுக்கும் பொருந்தும். சில வங்கிகளின் சிவில் அடையாள அட்டைகள் காலாவதியான நிலையில் ஏ.டி.எம் கார்டுகளும் தற்காலிகமாக முடக்கப்படும். குடியிருப்பு ஆவணத்தை புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பலர் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக பலர் வங்கிக் கணக்குகளை ரத்து செய்வது என்ற தீர்வை நம்பியிருக்கிறார்கள். ஆனால் இது குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டினரையே அதிகம் பாதிக்கும், ஏனென்றால் புதிய வங்கி கணக்கைத் திறக்க பல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இவை பெரும்பாலும் கடினமாக இருக்கும். குடியிருப்பு அனுமதி காலாவதியாகும் முன் ஒரு மாதத்திற்கு குறைந்தது 3 முறை டேட்டாவை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Bank | Account Suspended | Workers Accounts