BREAKING NEWS
latest

Airport Close - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Airport Close செய்திகள், கட்டுரைகள், Airport Close புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, March 23, 2025

ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே பயங்கரமான தீ விபத்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மின்தடை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது

Image : துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி

ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே பயங்கரமான தீ விபத்து ஆயிரக்கணக்கான விமானங்கள் இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது

இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மின்தடை காரணமாக அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இந்திய நேரப்படி இன்று(21/3/25) வெள்ளிக்கிழமை காலையில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இது தொடர்பான செய்தி விமான நிலையம் வெளியிட்டது. விமான நிலையம் இன்று நள்ளிரவு 11:59 PM வரையில் மூடப்பட்டு இருக்கும். ஆன்லைன் விமான கண்காணிப்பு சேவை தளமான FlightRadar24 வெளியிட்டுள்ள தகவல்படி குறைந்தது 1,351 விமானங்களின் சேவைகள் இதனால் பாதிக்கப்படும். ஹீத்ரோ என்பது இங்கிலாந்தின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும், 2024 இல் அந்த விமான நிலைய முனையங்கள் வழியாக 83.9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.

மேலும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் குறைந்தது 120 விமானங்கள் அந்த விமான நிலையத்திற்குள் நுழைய வானில் பறந்தன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த 150 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 29 பேரை பாதுகாப்பாக மீட்டனர். பாரிஸில் உள்ள கேட்விக், சார்லஸ் டி கோல் விமான நிலையம், அயர்லாந்தில் உள்ள ஷானன் விமான நிலையம் மற்றும் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள விமான நிலையங்களுக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்க வேண்டிய விமானங்கள் திருப்பி விடப்பட்டதை ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளங்கள் சுட்டிக்காட்டியது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து முதலில் திருப்பி அனுப்பப்பட்ட சிங்கப்பூர், ஜோகன்னஸ்பர்க், லாகோஸ், கேப் டவுன் மற்றும் தோஹா உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த ஏழு விமானங்கள் கேட்விக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிலையம் திறக்கும் வரை பயணிகள் எக்காரணம் கொண்டும் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகி்ன்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றும், அடுத்த சில தினங்களும் ஹீத்ரோ விமான நிலையம் வழியாக பயணிக்க வேண்டிய பயணிகள், நீங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரச்சினை சரிசெய்து விமான நிலையம் இயக்க நிலைக்கு வந்தாலும் அடுத்த சில தினங்களுக்கு விமான சேவைகள் சீராகும் வரையில் கட்டுபாடுகள் தொடரும் என்ற கூடுத‌ல் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஹேய்ஸில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் 16,300க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Airport Close | Heathrow Airport | Power Outage

Add your comments to Search results for Airport Close