(அதிகாரிகள் பறிமுதல் செய்த கஞ்சா செடிகள்)
குவைத் போதைப் பொருள் கடத்தல் பிரவு அதிகாரிகள் கஞ்சா பயிரிட்ட வழக்கில் இருவரை கைது செய்தனர். Surra பகுதியில் 40 வயதுடைய ஒருவரின் வீட்டில் கஞ்சா வளர்ப்பதற்காக பாதுகாப்பு அதிகாரங்களுக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் நடத்திய சோதனையில் கஞ்சா செடிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் வீட்டில பல பகுதிகளில் நடத்திய சோதனையில் 50 கிராம் ஹாஷிஷ் மற்றும் ஒரு பையில் கஞ்சா விதைகளின் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் நடந்த விசாரணையில் கஞ்சா அதிகமாக பயிரிடப்படும் நாடுகளில் ஒன்றிலிருந்து விமான சரக்கு சேவை வழியாக நாட்டிற்கு கொண்டு வந்ததாக குற்றவாளி ஒப்புக்கொண்டார்.
மேலும் அவரது நண்பரும் வீட்டில் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வளர்த்தததாகவும்,விற்பனைக்கு அல்ல என்று குற்றவாளிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க கூறிய பொய்யாகவே அதிகாரிகள் இதை கருதுகின்றனர். இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்துடன் போதைப்பொருள் கைவசம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில்,சட்ட நடவடிக்கைகளுக்காக உயர் பாதுகாப்பு வட்டாரங்களிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் குவைத் குடிமகன்கள் என்பது அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Drug Control | Kuwait Police | Arrested Criminals