குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா உள்ளிட்ட 6 நாட்டினர்கள் நேரடியாக நுழைய அனுமதி;விமான சேவை துவங்கும் தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்படும்
Image : Kuwait Airport
இந்தியாவில் இருந்து குவைத்திற்கான நேரடி வணிக விமானங்கள் இயக்க அனுமதி; DGCA விதிமுறைகளை வெளியிட்டுள்ளது
குவைத் சிட்டி: இந்தியா, எகிப்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு நேரடி வணிக(பயணங்கள்) விமான சேவைகளை மீண்டும் தொடங்க பிரதமர் ஷேக் சபா காலித் அல் ஹமாத் அல்-சபா தலைமையில் கடந்த(18/8/21) புதன்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு நாட்டின் கொரோனா அவசரக் குழு நிர்ணயித்த நிபந்தனைகளுக்கு ஏற்ப அமைச்சரவையால் எடுக்கப்பட்டது. தொடர்ந்து நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை(டிஜிசிஏ) கொரோனா அவசரக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்று(24/08/21) செவ்வாய்கிழமை மாலையில் ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது. சுகாதார அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான விதிமுறைகள் பின்வருமாறு:
1) குவைத் சுகாதாரதுறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஃபைசர், மோடெனா, அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் ஆகும். இவற்றில், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒற்றை டோஸ் எடுத்தால் போதும். இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன கோவ்ஷீல்ட் தடுப்பூசி தான் அஸ்ட்ராஜெனெகா எனவே இவை குவைத் சுகாதரத்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குவைத்தால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளான ஜினா ஃபார்ம், சினோவாக் மற்றும் ஸ்பாட்னிக் போன்றவை எடுத்துக்கொண்ட நபர்கள் குவைத்தால் அங்கீகரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட தடுப்பூசிகளில் ஒன்றை மூன்றாவது டோஸ்யாக எடுத்துக்கொண்டால் நாடில் நுழைய அனுமதிக்கப்படும்.
2) குவைத்தில் தடுப்பூசி பெறுபவர்களாக இருந்தால் Immune App/Kuwait Mosafir மற்றும் குவைத் மொபைல் ஐடி ஆகியவற்றின் Status Green Signal பெற்றிருக்க வேண்டும். அதேபோல் குவைத்துக்கு வெளியே தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தால் பாஸ்போர்ட்டில் பயணிப்பவரின் பெயரும், தடுப்பூசி சான்றிதழில் உள்ளதைப் போலவே இருக்க வேண்டும். என்ன வகையான தடுப்பூசி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்த நாளில் எடுக்கப்பட்டது. தடுப்பூசி மையத்தின் பெயர் ஆகியவற்றுடன் மின்னணு QR குறியீடு இருக்க வேண்டும், இல்லையெனில் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். இது சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும்.
3) வீட்டுப் பணியாளர்கள் இவர்கள் தடுப்பூசிகள் எடுத்து கொண்டு பில்சலாமா தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்(அனைத்து விமான நிறுவனங்களும் இது பொருந்தும்) இன்று வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை முந்தைய சுற்றறிக்கைகளில் இருந்து மாறுபட்டு உள்ளது. புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையில் பயணி எதிர்மறையாக இருக்க வேண்டும், மேலும் குவைத் வந்தவுடன் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.
முன்னர் கோவிட் இரண்டாவது அலையைத் தொடர்ந்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. கடந்த ஆகஸ்ட்-1 முதல் இது திறக்கப்பட்ட நிலையிலும் ஒரு நாளைக்கு 5,000 பேர் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர், பின்னர் அது 7,500 ஆக அதிகரிக்கப்பட்டது. இது தற்போது 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விமானம் சேவை Start ஆகின்ற தேதி மட்டும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கபட்டுள்ளது. தினசரி குவைத்தில் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையில் கட்டுபாடுகள் உள்ளதால் விமான நிறுவனங்கள் இருக்கைகளை பகிர்ந்துக் கொள்வது, ஒவ்வொரு நாடுகளில் இருந்து நுழைய அனுமதிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகு விமான சேவை துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்துத் துறையின் இயக்குனர் அப்துல்லா ஃபாடஸ் அல்-ராஜி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.புதிய முடிவின்படி, நீண்ட காலமாக நாட்டில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியர்கள் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் தேடி குவைத் திரும்புவதற்காக இணக்கமான சூழல் உருவாகியுள்ளது மிகவும் ஆறுதலான செய்தி ஆகும்.
Kuwait Airport | Return Kuwait | August 26