ஓமானுக்கு சமீபத்தில் யு.கேயில் இருந்து திரும்பிய ஒரு நபருக்கு சில நாட்களுக்கு பிறகு புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக ஓமான் அறிவித்தது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட நபரின் சிகிச்சைக்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் யு.கேயில் இருந்து நாட்டில் வருவதற்கும் எடுக்கப்பட்ட COVID-19 பரிசோதனையில் பாதிப்பு எதிர்மறையானவை, என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த COVID-19 வழக்குகள் எண்ணிக்கை 129,774 ஐ எட்டியுள்ளன, அதே நேரத்தில் குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 122,406 ஆக உள்ளது, இது பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 94.3 சதவீதம் உள்ளது. நாட்டில் COVID-19 தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 1,502 ஆக இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12 வழக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது, மேலும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது, அவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) உள்ளனர் என்றும் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.