BREAKING NEWS
latest

Cyber Crime - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Cyber Crime செய்திகள், கட்டுரைகள், Cyber Crime புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, December 21, 2022

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளது

Image : Any Desk preview window

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு வழக்கறிஞர் அலுவலகம்(Public Prosecution Office) கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் Any Desk அப்ளிகேஷனை நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Any Desk அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்லி மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மற்றவர்களின் மொபைல் ஃபோன், கணினி போன்ற சாதனங்களையும் கட்டுப்படுத்தவும், மோசடி செய்பவர்கள் உங்களுடைய வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவும் முடியும்.

எனவே இந்த அப்ளிகேஷன் அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் அப்ளிகேஷனை எந்த தேவைகளுக்காகவும் பதிவிறக்கம் செய்ய சொல்லி WhatsApp, Messenge வழியாக Link உள்ளிட்டவை அனுமதி கோரிக்கை விடுத்தால் அத்தகைய குறுந்தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Any Desk | Cyber Crime | Kuwait Police

Add your comments to Search results for Cyber Crime