BREAKING NEWS
latest

Daubi Nurse - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Daubi Nurse செய்திகள், கட்டுரைகள், Daubi Nurse புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, April 18, 2023

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

Image : உயிரிழந்த இளைஞர் மற்றும் பெற்றோர்

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் ஆஸ்டர் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து கொண்டிருந்தவர் விஷ்ணு பிரகாஷ்(வயது-26). இவர் இந்தியா, தமிழகம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த மாதம் விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருக்கிறார், வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவரும் அதற்கு சரி என்று ஒப்புதல் கொடுத்துவிட்டு திரும்பவும் துபாய் திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் காரணம்???? தன்னுடன் வேலை செய்த ஒரு கேரளாவை சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், ஏதோ காரணத்தினால் காதல் முறிந்து விட்டதால் விரக்தியில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக தூக்கில் தொங்கியோ, விஷம் குடித்து அல்லது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டால் பரவாயில்லை. மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ஒரு உயிர் கொல்லி மருந்தினை திருடி இருக்கிறார்.

தொடர்ந்து அந்த மருந்தினை இன்சுலின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏற்றி இருக்கிறார். அவருடைய அறையில் இருந்த மற்ற நபர்கள் கேட்ட பொழுது வயிற்று வலி என்பதாக கூறி, மருத்துவர் தான் மருந்தை கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். இவர் அதே துறையில் வேலை செய்வதால் அதை உண்மை என்று நம்பியுள்ளனர். ஆனால் உண்மையில் அந்த மருந்தானது உடலில் செலுத்தினால் முதலில் மூளை சாவு ஏற்படும், பிறகுதான் அவர் இறக்க கூடுமாம், வலி இல்லாமல் இறக்கலாமாம் அதை அறிந்தே செய்து இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டால் பரவயில்லை அடுத்து நடந்ததை பாருங்கள்.

தொடர்ந்து பல இடங்களில் பலரிடம் அந்த பையனின் குடும்பம் உதவி கேட்டும், உடலை ஊருக்கு அனுப்ப முடியாததால் அமீரகத்தில் உள்ள சமூக ஆர்வலர் கௌசர் அவர்களிடம் உதவி கேட்டு மார்ச் 24ஆம் தேதி வந்திருந்தார்கள். குடும்பத்தின் நிலை அறிந்து உடலை ஊருக்கு அனுப்ப ஆவணங்களை சேகரிக்க தொடங்கினார். ஆனால் இவர் தற்கொலை தொடர்பான வழக்கு துபாய் உயர் நீதிமன்றத்தில் இருந்தது மற்ற எல்லா ஆவணங்களையும் சரி செய்து தயார் செய்து வைத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு ஆவணம் வேண்டி இருந்தது.

ஆனால் நீதிமன்றமோ வழக்கினை தீவிரமாக விசாரிக்க சொன்னார்கள், அவருக்கு மருந்து எப்படி கிடைத்தது, இந்த மருந்தை பெட்டகத்தில் இருந்து எடுக்க சாவியை கொடுத்தது யார்....??? அறையில் இருந்தவர்கள் ஏன் அதை பரிசோதிக்கவில்லை...?? அவர் காதல் தோல்வி பிரச்சனை இருந்த பொழுது தனியாக அறையில் விட்டது ஏன்...??? என பல கோணங்களில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க, முக்கிய காரணமாக அவர் செலுத்திக்கொண்ட மருந்து தடை செய்யப்பட்ட மருந்தாகும், அதை சரியான அனுமதியின்றி எடுக்கவும் முடியாது, எப்படி அவர் கையில் அது வந்தது என வழக்கு நீட்டிக்கொண்டே போக, அறையில் உடன் இருந்தவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கடைசியாக அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்கிற தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தது, ஒரு வழியாக ஊருக்கு அனுப்பி விடலாம் என்று பார்த்தால், சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு ஆவணம் தேவைப்பட்டது அதே காரணம் சொன்னார்கள். கிட்ட தட்ட மார்ச் 24 தேதி முதல்PRO, HR, போலீஸ் ஸ்டேஷன், மார்சுவரி, நீதி மன்றம் என எல்லா இடத்திற்கும் பலமுறை அலைந்தும், தினமும் தொலைபேசியில் அழையத்தவாரும் இருந்தனர் பெற்றோர், நேற்று முன்தினம் காலையில் கூட அழைத்திருந்தேன் ஆனால் ஒரு விவரம் இல்லாததால் எப்படியும் விடுமுறைக்குப் பிறகே உடல் செல்லும் என்று நினைத்தேன்.

இதற்கிடையே சொந்த விஷயமாக கௌசர்(நாளை) ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது. குடும்பத்தார் அங்கிருந்து ஐயா நீங்கள் கிளம்புவதற்கு முன் உடலை அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தாய் தந்தை சரியாக உணவு உட்கொள்ளாமல், அவர்களும் படுத்த படுக்கையாக ஆகிவிட Glucose ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினங்களில் எண்ணிடம் வந்த எல்லா மரண கேஸ் முடித்து விட்டேன்... ஆனால் இது முடியாமல் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இன்று(நேற்று) மதியம் ஆவணங்கள் வந்துவிட்டது, மீதி உள்ள எல்லா ஆவணங்களையும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம். கம்பெனி பி.ஆர்.ஓ உடனடியாக நாம் ஏற்கனவே சொல்லி இருந்த வழிகாட்டுதலின்படி, சற்றும் தாமதப்படுத்தாமல் இந்திய தூதரகம் சென்று உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு நேற்று இரவு 11:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு உடலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு வழியாக உடல் இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையில் தரை இறங்கும் என்றும், 38 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்தது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சாதாரணமாக, உடல்நலக்குறைவு, விபத்து இப்படி எதாவது ஒன்று இறந்தால் விதி என்று கூறலாம். நல்ல பெற்றோர்கள், நல்லததொரு வேலை எல்லாம் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.. காதலி என்று கூறும் அவளுக்கு என்ன???? இன்னொரு திருமணம் செய்து கொண்டு ஒன்னும் நடக்காது போல் இருப்பாள். போனது யார்க்கு அவருடைய பெற்றொருக்கு. ஊரில் இருந்து தற்கொலை செய்தால் கூட பரவில்லை.... 38 நாட்கள் போராட்டம் அந்த பயனுடைய வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு நாட்கள் எவ்வளவு துயரத்துடன் இருந்து இருப்பார்கள் என்பது கூற முடியாத வலியே.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

India Nurse | India Suicide | Daubi Nurse

Add your comments to Search results for Daubi Nurse