அமீரகத்திற்கு பயணம் மற்றும் திரும்பும்போது உடன் எடுத்துச் செல்ல அனுமதியுள்ள பொருட்கள் என்னென்ன என்பதை அமீரக மத்திய சுங்கத்துறை ஆணையம் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது
Image credit:Dubai Airport
அமீரகத்திற்கு பயணம் மற்றும் திரும்பும்போது உடன் எடுத்துச் செல்ல அனுமதியுள்ள பொருட்கள் என்னென்ன.....????
ஐக்கிய அரபு எமிரேட்ஸட்-க்கும் மற்றும் திருப்பியும் பயணிப்பவர்களுக்கு சுங்க விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமீரக மத்திய சுங்கத்துறை ஆணையம்(எஃப்.சி.ஏ) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்று(28/03/21) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் பட்டியலையும் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை வெளியிட்டது. பலர் அறியாமையால் பாதிக்கப்படுவதை(வழக்குகளில் கைது ஆவதை) கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரபு,ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இது தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு வீடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.
மூவி ப்ரொஜெக்டர்கள், ரேடியோ,சிடி பிளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், டி.வி மற்றும் ரிசீவர்கள்(ஒன்று), தனிநபர் விளையாட்டு உபகரணங்கள், சிறிய கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள்(கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு) ஆகியவை அனுமதிக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.
பயணிகள் எடுத்துச்செல்லும் பரிசு பொருட்களின் மதிப்பு AED 3,000 ஐ தாண்டக்கூடாது. பொருட்களுடன் சேர்த்து அதிகபட்சம் 200 சிகரெட்டுகள் அனுமதிக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட பயணிகள் புகையிலை பொருட்கள் அல்லது ஆல்கஹால் கையில் எடுத்துச் செல்லக்கூடாது. அதுபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்து புறப்படும் பயணிகள் கையில் பரிசு பொருட்களின் மதிப்பு AED 3,000 க்கு அதிகமாக இருந்தலோ அல்லது 60,000 க்கும் மேற்பட்ட திர்ஹாம் மதிப்புள்ள நாணயம் அல்லது விலைமதிப்பு மிக்க உலோகங்கள்(தங்கம் இப்படிப்பட்ட எதாவது) அல்லது விலையுயர்ந்த கற்கள் இருந்தால் சிறப்பு படிவத்தில் அதன் விபரங்கள் நிரப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தடை செய்யப்பட்டவையின் விபரங்கள் பின்வருமாறு;நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள மருந்துகள்(போதைப்பொருட்கள் உள்ளிடவை இதில் அடங்கும்) சூதாட்ட உபகரணங்கள், நைலான் மீன்பிடி வலைகள், பன்றிகள், தந்தங்கள், சிவப்பு விளக்குகள் கொண்ட லேசர் பேனாக்கள், கள்ளநோட்டு, அணு கதிர்வீச்சு உள்ள பொருட்கள், ஆபாச புத்தகங்கள் மற்றும் மதங்களை குறித்த அவதூறு பரப்பும் ஆவணங்கள், ஆபாச சிடி,வெற்றிலை உள்ளிட்ட சிவக்கக்கூடிய பொருட்கள் மற்றும் கற்சிலைகள் உள்ளிட்டவை அடங்கும்.
கட்டுபாடுகள் உள்ள சில பொருட்கள் அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டு வரலாாம,அதன் விபரங்கள் பின்வருமாறு நேரடியாக விலங்குகள், தாவரங்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், நாவல்(வெளியீடுகள்), புதிய வாகன டயர்கள், வயர்லெஸ் உபகரணங்கள், ஆல்கஹால், அழகுசாதனப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், பாரம்பரியமாக கைவசம் உள்ள கற்கள் மற்றும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.இதற்கு சம்பந்தப்பட்ட பல்வேறு அமைச்சகங்களின் ஒப்புதல் தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வரும் அறிவிப்பை பின்பற்றிய பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்த(தெரியாத) நபர்கள் கைவசம் ஒப்படைக்கும் பொருட்கள் அடங்கிய பார்சல்களில் என்ன இருக்கிறது என்ற தெரியாமல் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். அதுபோல் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் நண்பர்களிடமிருந்து கூட பைகள் பார்சல் வாங்க வேண்டாம். அத்தகைய பைகளில் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பணம் அல்லது போதைப்பொருள் உள்ளிட்ட பிற பொருட்கள் இருக்கலாம். மருந்துகளை கொண்டு வரும்போது, மருத்துவரின் ஒப்புதல் குறிப்பை கையில் வைத்திருக்க வேண்டும், அதுபோல் விமான நிறுவனங்கள் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிந்துள்ளது
Uae Airport | Dubai Airport | Dubai Customs