BREAKING NEWS
latest

Eid Holidays - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Eid Holidays செய்திகள், கட்டுரைகள், Eid Holidays புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, March 23, 2025

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஈத் தொடர் விடுமுறை 9 நாட்கள் கிடைக்குமா அல்லது 5 நாட்களாக சுருங்குமா என்பது பிறை தென்படும் தேதியை பொறுத்து இந்த வருடம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது

Image : குவைத் சிட்டி டவர்

குவைத்தில் 9 நாட்கள் ஈத் விடுமுறை என்ற கனவுக்கு டிஸ்ட் வைத்து சிவில் சர்வீஸ் கமிஷனின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்த ஆண்டு ஈத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுப்பு எடுக்க முடியும் என்ற கனவில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு பேரிடியை கொடுத்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டிற்கான ஈத் விடுமுறை மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆனால் மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தெரிவதன் அடிப்படையில் மட்டுமே ஈத் விடுமுறை எப்போது முடிவடைகிறது என்பதை அறிய முடியும். மார்ச்-29,2025 சனிக்கிழமை மாலையில் பிறை தென்பட்டால் மார்ச் 28 மற்றும் 29 வார விடுமுறை நாட்களைத் தவிர, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் வரையிலான 3 நாட்கள் ஈத் விடுமுறை உட்பட தொடர்ந்து 5 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். இதை தொடந்து ஏப்ரல்-2,2025 புதன்கிழமை முதல் வேலை நாள் தொடங்கும்.

ஆனால் மார்ச்-29,2025 அன்று பிறை தென்படாத சூழ்நிலை ஏற்பட்டால் மார்ச்-30,2025 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல்-3,2025 வியாழன் வரை தொடர்ந்து 5 நாட்கள் வரை பொது விடுமுறையும், விடுமுறை தொடங்குவதற்கும் முன்னரும்-பின்னரும் உள்ள 4 நாட்கள் வார விடுமுறை உட்பட 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், இதையடுத்து ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும். இதில் டிஸ்ட் எங்கே என்று தானே கேட்கிறீங்க....??? மீதியை படியுங்கள் புரியும்......

அதாவது ஏப்ரல் 2 வேலை நாளா இல்லையா என்பதை அறிய ஊழியர்கள் மார்ச் 29 சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் கமிஷன் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ஏப்ரல் 2, 3(புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் விடுப்பு எடுப்பவர்கள் வருகின்ற மார்ச்-27 வியாழக்கிழமைக்குள் விடுப்புக்கான விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு விடுப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு, அவசரகால விடுப்பு போன்றவற்றை பயன்படுத்தி விடுமுறை எடுத்து நழுவும் நபர்களுக்கு சிவில் சர்வீஸ் கமிஷன் கட்டுபாடு விதித்துள்ளது. இந்த நாட்களில் மருத்துவ விடுப்பு மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே பெற முடியும் என்று கமிஷன் தடை விதித்துள்ளது.

அதேபோல் அவசரகால விடுப்பு ஒரு நாள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவசர விடுமுறை அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்த நாட்களில் பணிக்கு வராத ஊழியர்களின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடுமுறை பதிவு செய்யப்படும் என்றும், இந்த நாட்கள் வருடாந்திர விடுப்பில் இருந்து கழிக்கப்படும் எனறும் அறிவிக்கையில் எச்சரித்துள்ளது. எங்களுக்கு கிடைக்காத 9 நாட்கள் தொடர் விடுமுறை உங்களுக்கு மட்டும் எதுக்குடா....??? என்ற தனியார் கம்பெனி ஊழியர்கள், வீட்டு பணியாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் குமுறல் சத்தம் சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு கேட்டிருக்குமோ.....????

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Official Holiday | Eid Holidays | Kuwait Csc

Add your comments to Search results for Eid Holidays