சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்
Image credit: உயிரிழந்த தமிழர்கள்
குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்
சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Tamil Workers | Fire Accident | Death Dammam