சவுதி மதுபானக் கடையை திறக்கத் தயாராகி வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது
Image : சவுதி அரேபியா சிட்டி
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
சவுதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை தலைநகர் ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது, இது முஸ்லீம் அல்லாத குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள வெளிநாட்டினருக்காக மட்டுமே சேவை செய்யும் என்ற செய்தி இன்று(24/01/24) மாலையில் வெளியாகியுள்ளது.
இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், முஸ்லீம் கொள்கைகள் தீவிரமாக பின்பற்றும் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும். எண்ணெய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை உருவாக்க விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.
மேலும் முஸ்லீம் அல்லாத சாதாரண வெளிநாட்டினர் இந்த கடைக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை சற்றுமுன் பல பிரபலமான செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Saudi Arabia | Alcohol Store | First Shop