BREAKING NEWS
latest

Fishing Workers - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Fishing Workers செய்திகள், கட்டுரைகள், Fishing Workers புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, February 7, 2024

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் படகில் தப்பித்த 3 தமிழர்கள் இந்தியா கடலோர காவல்படையிடம் சிக்கினர்

Image : கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியால் கடுமையான துன்புறுத்தலைத் தொடர்ந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 பேர் முதலாளியின் படகுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நேற்று செவ்வாய்கிழமை(06/02/2024) மாலையில் ஆண்டனி, நிதிசோ டிட்டோ மற்றும் விஜய் ஆண்டனி என்ற 3 தமிழர்கள் கேட்வே ஆஃப் இந்தியா அருகே மும்பை காவல்துறையின் ரோந்துக் குழுவிடம் பிடிபட்டனர். இவர்கள் மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தற்போது கொலாபா காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் குவைத்தில் உள்ள முதலாளியின் மீன்பிடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளனர். கடுமையான சித்திரவதை மற்றும் சுரண்டலை எதிர்கொள்ளவே வேறு வழியின்றி உயிரை காப்பாற்ற இப்படி செய்ய வேண்டியதாயிற்று என்றும், முதலாளியின் படகைத் திருடி இந்தியாவுக்குத் தப்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பாஸ்போர்ட்டை முதலாளி தடுத்து வைத்துள்ளார் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். 12 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர். உணவு தீர்ந்து போனதால் சுமார் 4 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். படகில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆனால், கடலோர கண்காணிப்புப் படையின் கண்ணில் படாமல் இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வழி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக தான் இந்தியாவுக்கு வந்து மும்பையில் தீவிரவாத தாக்குதலும் நடத்தினர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fishing Workers | Kuwait Workers | India Gateway

Add your comments to Search results for Fishing Workers