Image credit: கொலை செய்யப்பட்ட பணிப்பெண்
குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட பணிபெண் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது
குவைத்தில் இரு தினங்களுக்கு முன்னர் அதாவது ஞாயிற்றுகிழமை மாலையில் வீட்டு பணிப்பெண் ஒருவர் படுகொலை செய்யபட்டு சல்மி சாலை ஓரத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சி செய்தி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொல்லபட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவரான அந்த பெண்ணின் பெயர் ஜூலிபீ ரணரா(வயது-35) என்பது தெரியவந்துள்ளது. அந்த வீட்டுப் பணிப்பெண் கர்ப்பமாக இருந்தார் என்ற புதிய தகவலை தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தெரியவந்தது முதல் துரிதமாக செயல்பட்ட குவைத் காவல்துறை 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியான 17-வயது குவைத் குடிமகனான இளைஞனை கைது செய்தனர். அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான், மேலும் கொலைக்கான காரணத்தை கண்டறிய கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த பணிப்பெண்ணின் குடும்பத்தினை நேரில் சென்று சந்தித்த பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சூசன்-வோ அமைச்சகம் சார்பிலும், தன்னுடைய தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளித்தார்.
மேலும் இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிலிப்பைன்ஸில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துறை குவைத் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும், இளம் பெண்ணுக்கு நீதி உறுதி செய்யப்படும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் குறித்து தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கவும், அவர் செய்த கொடூரமான குற்றத்திற்காக குற்றவாளியை தண்டிக்கவும் குவைத் அரசாங்கத்தை குவைத் வலியுறுத்தியதாக சூசன்-வோ தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Housemaid | Housemaid Kuwait | Housemaid Killed