இந்தியாவில் இருந்து அமீரகம் செல்கின்ற இன்டிக்கோ விமானங்களுக்கு ஒரு வாரத்திற்கு அமீரகம் திடிரென தடை விதித்துள்ளது
Image credit: Indigo Air
இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இண்டிகோ விமானங்களுக்கு ஆகஸ்ட்-24,2021(செவ்வாய்கிழமை) வரை திடிரென தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் விமான நிலையத்தில் வைத்து 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்க வேண்டிய Rapid-Test எடுக்காமல் பயணிகளை துபாய்க்கு அழைத்து சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த நாட்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் Refund வேண்டி விண்ணபிக்கவோ அல்லது மற்றொரு தேதிக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என்று விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் வருகின்ற பயணிகள் GDRFAD அனுமதி பெறுவதுடன், 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையும் மற்றும் 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட Rapid-Test பரிசோதனையும் தேவை என்பது குறி்ப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் தான் 4 மணிநேரத்திற்கு முன்பு Rapid-Test எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை 6 மணிநேரத்திற்கு முன்பு என்று திருத்திய புதிய அறிவிப்பை அமீரகம் சார்பில் வெளியிட்டுள்ளது. பயணிகள் புறப்படும் விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க இந்த தளர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பரிசோதனையிலும் Negative யாக இருந்தால் மட்டுமே பயணிகள் விமானத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது விதிமுறை ஆகும்.
Indigo Flight | India Uae | Temporary Suspended