குவைத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவ அதிகாரி தகவல்
Image credit: ஜஹரா மருத்துவமனை
குவைத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பினார்
குவைத்திற்க்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த பயணி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது இதையடுத்து அந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் நோய் முற்றிலுமாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியாதாக ஜஹரா மருத்துவமனை இயக்குநர் டாக்டர். ஜமால் அல்-துய்ஜ் அவர்கள் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் அனைத்து சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடித்த பிறகு நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதித்ததாக அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நாட்டில் முதன் முதலாக காலரா நோய்த் தொற்று பதிவானது. சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் சரியாக வேகவைக்காத உணவு பொருட்கள் உள்ளிட்டவையில் இருந்து இந்த நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிரை பறிக்ககூடியது இந்த நோய். மேலும் ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய குவைத் குடிமகன் ஒருவருக்கே இந்த நோய் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜஹரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Jahra Hospital | Cholera Disease | Kuwait Airport