BREAKING NEWS
latest

Kuwait Back - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Back செய்திகள், கட்டுரைகள், Kuwait Back புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, August 23, 2021

இந்திய உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்துக்குள் நுழைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Image : Kuwait Airport

இந்திய உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்துக்குள் நுழைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியா, இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்காளதேஷ் உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட பட்டியலை சேர்ந்தவர்கள் நேரடியாக நுழைய நேற்று(22/07/21) முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிவில் விமான போக்குவரத்து சார்பில் விமான சேவை தொடங்குவது தொடர்பான உறுதிசெய்யப்பட்ட தகவல் நேற்று(21/08/21) முன்தினம் இரவு வரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்க சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ள மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நேரடியான விமான சேவை துவங்குவது தொடர்பான முடிவில் அவசரபட வேண்டாம் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், பயணிகள் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் அமைய தேவையான நடவடிக்கைகளை முடித்த பிறகு பயணிகளை அனுமதிக்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறையினை மேற்க்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல் நாட்டின் தேசிய விமான நிறுவனங்கள் மற்றும் நாட்டில் இருந்து செயல்படும் மற்ற விமான நிறுவனங்களுக்கிடையேயான செயல்பாடுகள், விமான இருக்கைகளை சமமாக பகிர்ந்து கொள்வது மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளை உட்கொள்ளும் திறனை அதிகரிப்பது, குறிப்பாக எகிப்து மற்றும் இந்தியாவில் இருந்து பயணிகள் வருகின்ற நிலையில் இது மிகவு‌ம் முக்கியமான ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்களின் இயக்கம் தொடர்பான அட்டவணைகள் மற்றும் விநியோகம் உள்ளிட்டவை இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்றும் அது சம்பந்தப்பட்ட துறையை மேற்க்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடைய இந்த 6 நாடுகளில் இருந்து நேரடியாக வருகின்ற பயணிகளுக்கு ஒரு வாரகால ஹோட்டல் தனிமைப்படுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகளும் புதிதாக எழுந்துள்ளது. இந்த விஷயங்களில் எல்லாம் இறுதி முடிவு எடுத்த பின்னரே நேரடியாக பயணிகளை நாடில் நுழைய அனுமதிக்கும் தேதி அறிவிக்கப்படும்.சில நேரத்தில் அடுத்த சில நாட்களில் கூட பயணிகள் நுழைவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Kuwait Back | One Week | Kuwait Airport

Add your comments to Search results for Kuwait Back

Thursday, July 18, 2019

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது:


      

மலேசியாவில் இன்று வியாழக்கிழமை (18/07/2019) குடிவரவு சட்டம் 1959/63 (சட்டம் 155) இன் கீழ் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தானாக முன்வந்து நாடு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் விதத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசியாவில் இந்தியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள்.இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏஜென்சிகள் மூலம் ஏமாற்றப்பட்டு மற்றும் விசா காலம் முடிந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளது,உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தவிக்கும் தொழிலாளர்கள் பயன்படும் விதத்தில் இந்த பொதுமன்னிப்பு இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இது தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவரும் பலருக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு ஆகஸ்டு 1,2019 (01/08/2019) முதல் டிசம்பர் 31,2019 (31/12/2019) வரையில் அமலில் இருக்கும்.கிரிமினல் வழக்குகளை தவிர்த்து, மற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் பயண ஆவணங்கள் தங்களிடம் இருந்தால் குடிநுழைவுத் துறைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பொதுமன்னிப்பு பெற அபராதமாக 700 ரிங்கிட் கட்டணத்தில் செய்ய வேண்டும் . ஆவணங்கள் இல்லாதவர்கள் மலேசியாவில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரகத்துக்குச் சென்று அவற்றை பெற்று வர வேண்டும். பின்னர் இந்த பொதுமன்னிப்பு பெற பதிவு செய்ய வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நீங்கள் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்த பின்வரும் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்:

1) நீங்கள் ஆகஸ்ட் 1,2019 முதல் டிசம்பர் 31,2019 வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும்(Amnesty "Back for good" to start from 1 Aug 2019 - 31 Dec 2019)

2)இந்த பொதுமன்னிப்புக்கும் உங்களை அழைத்து சென்ற எந்த முகவர்களும் மற்றும் உங்கள் முதலாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர்களுக்கு பணம் உள்ளிட்ட எதையும் செலுத்த வேண்டாம்(No agents involved - Do NOT pay anything to your employers or agents)

3) நீங்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசரகால பயண சான்றிதழ் ஆகியவற்றை மலேசியாவில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வேண்டும்(Get your passport and and emergency certificate from respective embassies)

4)  நீங்கள் தாயகம் திரும்ப தேவையான அனைத்து ஆவணங்களும் சரிசெய்த பிறகு 7 நாட்களில தாயகம்  திரும்பும்  விதத்திலுள்ள ஒரு வழி விமான பயணச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். (One way return ticket (issued within 7 days from application)

5) மலேசியா பணம் 700 ரிங்கிட் அபராத தொகையாக கட்ட வேண்டும்(RM700 fine)

6)நீங்கள் நேரடியாக மலேசியா குடிநுழைவுத் துறையின் அலுவலகம் செல்ல வேண்டும் இந்த பொதுமன்னிப்புக்காக 80 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.(Go directly to immigration - 80 counters are opened in immigration offices in Peninsular Malaysia). This programme is not for Sabah and Sarawak)

7) டிசம்பர் 31,2019 க்குப் பிறகு ஆவணமற்ற சட்டத்திற்கு புறம்பாக மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்களை(தொழிலாளர்களை) கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மலேசியா குடிவரவு துறை மற்றும் காவல்துறை தலைமையில் தீவிரமாக துவங்கும் (Immigration and police will commence crackdown to arrest and detain undocumented migrants after 31 Dec 2019)


மலேசியாவின் இந்த பொதுமன்னிப்பு அரசு சம்பந்தப்பட்ட ஒரே திட்டம் எனவும்
மூன்றாம் தரப்பு இடைத்தரகர்கள் அல்லது முகவரின் ஈடுபாடு இல்லாமல் குடிவரவு துறையால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெளிவு படுத்தினார்







குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.


Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to Search results for Kuwait Back

Sunday, August 22, 2021

குவைத்திற்கு இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் நேரடியான வருகை குறித்த சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெறு‌ம்

இந்தியா உட்பட 6 நாடுகளைச் சேர்ந்தவர்களின் நேரடி நுழைவு நடைமுறைப்படுத்தல் குறித்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெறு‌ம்

Image : KuwaitCity

குவைத்திற்கு இந்தியர்கள் உள்ளிட்டவர்களின் நேரடியான வருகை குறித்த சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெறு‌ம்

இந்தியா உள்பட 6 நாடுகளில் இருந்து குவைத்துக்கு நேரடியாக நுழைவதற்கு அமைச்சரவை முடிவை செயல்படுத்துவது குறித்து குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளின் அவசர கூட்டம் இன்று(22/08/21) ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 18-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளத்தில் இருந்து குவைத்துக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் நேற்றுவரை விமான நிலைய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக எந்த அரசாங்க நிறுவனத்திடமிருந்தும் இறுதி அறிவிப்பு வரவில்லை.

மேலும், விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை. இந்த நிலையில்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளின் அவசர கூட்டம் இன்று கூட்டுகின்றனர். அதே நேரத்தில், சீன மற்றும் ரஷ்யா நாடுகளின் தடுப்பூசிகளைப் எடுத்துக் கொண்டவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் அமைச்சரவை முடிவு குறித்து விமான அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசிகளைப் எடுத்துக்கொண்ட சில வளைகுடா நாடுகளில் இருந்து குவைத் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு குடிமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பயணிகள் வருகை குறித்து குவைத் விமான நிலைய அதிகாரிகளின் அறிவிப்பு வெளியாகாத நிலையில் சில விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கவில்லை. இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் குவைத்தில் நுழைய விதிமுறைகள் அறிய இங்கே படிக்கலாம் Cilck: https://www.arabtamildaily.com/2021/08/welcome-back-to-kuwait-from-august-22.html

Add your comments to Search results for Kuwait Back