இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்தில் நுழைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : Kuwait Airport
இந்திய உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக குவைத்துக்குள் நுழைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தில் இந்தியா, இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்காளதேஷ் உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட பட்டியலை சேர்ந்தவர்கள் நேரடியாக நுழைய நேற்று(22/07/21) முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சிவில் விமான போக்குவரத்து சார்பில் விமான சேவை தொடங்குவது தொடர்பான உறுதிசெய்யப்பட்ட தகவல் நேற்று(21/08/21) முன்தினம் இரவு வரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்க சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் நேற்று அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ள மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நேரடியான விமான சேவை துவங்குவது தொடர்பான முடிவில் அவசரபட வேண்டாம் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், பயணிகள் வருகை தொடர்பாக செய்ய வேண்டிய வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் அமைய தேவையான நடவடிக்கைகளை முடித்த பிறகு பயணிகளை அனுமதிக்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட துறையினை மேற்க்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல் நாட்டின் தேசிய விமான நிறுவனங்கள் மற்றும் நாட்டில் இருந்து செயல்படும் மற்ற விமான நிறுவனங்களுக்கிடையேயான செயல்பாடுகள், விமான இருக்கைகளை சமமாக பகிர்ந்து கொள்வது மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகளை உட்கொள்ளும் திறனை அதிகரிப்பது, குறிப்பாக எகிப்து மற்றும் இந்தியாவில் இருந்து பயணிகள் வருகின்ற நிலையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானங்களின் இயக்கம் தொடர்பான அட்டவணைகள் மற்றும் விநியோகம் உள்ளிட்டவை இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்றும் அது சம்பந்தப்பட்ட துறையை மேற்க்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதற்கிடைய இந்த 6 நாடுகளில் இருந்து நேரடியாக வருகின்ற பயணிகளுக்கு ஒரு வாரகால ஹோட்டல் தனிமைப்படுத்தல் ஏற்படுத்த வேண்டும் என்ற பரிந்துரைகளும் புதிதாக எழுந்துள்ளது. இந்த விஷயங்களில் எல்லாம் இறுதி முடிவு எடுத்த பின்னரே நேரடியாக பயணிகளை நாடில் நுழைய அனுமதிக்கும் தேதி அறிவிக்கப்படும்.சில நேரத்தில் அடுத்த சில நாட்களில் கூட பயணிகள் நுழைவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
Kuwait Back | One Week | Kuwait Airport