குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கிற எந்த வெளிநாட்டவரையும் உடனடியாக நாடுகடத்த உத்தரவு
Image : Kuwait Airport
குவைத்தில் இன்று நள்ளிரவு முதல் இந்த தவறை செய்யும் வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கிற எந்த வெளிநாட்டவரையும் உடனடியாக நாடுகடத்த முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள் அதிகாரிகளுக்கு கடுமையான(அதிகப்படியான) உத்தரவுகளை வழங்கினார். அதேபோல் விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் பிதுனிகளை(குடியுரிமை இல்லாத மக்கள்) இரண்டு நாட்கள் காவலில் வைக்கவும் மற்றும் அவர்களது வாகனத்தை இரண்டு மாதங்களுக்கு பறிமுதல் செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக இன்று நள்ளிரவு 12 மணிமுதல்,அதாவது புதன்கிழமை(11/10/23) முதல் விமான நிலையத்தில் சோதனைகளை செய்ய ஒரு குழுவை நியமித்து,24 மணி நேரமும் கண்காணிக்கும் சிறப்பு போக்குவரத்துப் பிரிவை அமைக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விமான நிலையத்தில் உத்தியோகபூர்வ டாக்ஸி சாரதிகளான பூர்வீகவாசிகளிடமிருந்து அமைச்சருக்கு நேரடியாகப் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குடிமக்களான விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ டாக்ஸி டிரைவர்களாக இருக்கும் மக்களிடம் இருந்து அமைச்சருக்கு நேரடியாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்களுடையவாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் விமான நிலையங்களை குறிவைத்து சட்டவிரோத டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர் என்று குடிமக்களான டாக்சி ஓட்டுநர்கள் அமைச்சரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
அவர்களின் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை செய்வார் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் தாயகத்தில் இருந்து வரும் உறவினர்களை சொந்த வாகனங்களில் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பொருந்துமா இல்லையா என்பதை குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Taxi| Kuwait Airport | Kuwait Drivers