குவைத்தில் போலியான பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் பரிசோதனையில் சிக்கியுள்ளன
Image : Kuwait Society Of Engineers Head Office
குவைத்தில் 4 இந்தியர்கள் உட்பட 7 போலியான பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்:
குவைத்தில் கடந்த ஆறு மாதங்களில் 4 இந்தியர்கள் உட்பட 7 வெளிநாட்டு பொறியாளர்களின் போலியான பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதாக பொறியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினர். மேலும் மற்ற மூன்று போலியான சான்றிதழ்கள் எகிப்து, வெனிசுலா மற்றும் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பொறியாளர்களுடையது.
பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பரிசோதனை குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த 7 நபர்களுக்கு எதிராகவும், அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை செய்கின்ற 5248 பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சங்கத்தால் சான்றளிக்க சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இவற்றில் 4320 சான்றிதழ்கள் மனிதவளக் குழுவின் ஒத்துழைப்புடன் சரிபார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டன. 928 சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 74 சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இதுவரை துவங்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Kuwait Engineers | Kuwait Job | Gulf Job