குவைத் உள்துறை அமைச்சகம் கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்துள்ளது
Image : Kuwait Police
குவைத் உள்துறை அமைச்சகம் அதிரடி;ஓட்டுநர்களை கைது செய்ய உத்தரவு:
குவைத்தில் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உள்துறை அமைச்சகம், அத்துறையின் அதிகாரிகளுக்கு டிசம்பர்-18ம் தேதி இன்று சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்படி கைது செய்யப்படும் நபர்களை நாடுகடத்தல் மையத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர் உரிமம் கைவசம் வைத்திருக்க குவைத் நடைமுறை படுத்தியுள்ள விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத வெளிநாட்டினரின் உரிமங்களை தானாக முன்வந்து ரத்து செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன(சம்பளம், பல்கலைக்கழகப் பட்டம் மற்றும் தொழில் துறை போன்ற தகுதிகளை இழந்தவர்கள்) இதன் காரணமாக கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியது. இதுவரை சுமார் 15,000 வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
Kuwait Moi | Kuwait Licence | Driving Licence