BREAKING NEWS
latest

Kuwait SIM - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait SIM செய்திகள், கட்டுரைகள், Kuwait SIM புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, February 6, 2024

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் தங்களுடைய மொபைல் சேவை தடைப்படாமல் இருக்க தங்களுடைய சமீபகால KYC விபரங்களை புதுபிக்க வேண்டும் என்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் சேவை தடைப்படாமல் இருக்க KYC விபரங்களை புதுபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

Image : மாதிரி புகைப்படம

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் தங்களுடைய மொபைல் சேவை தடைப்படாமல் இருக்க தங்களுடைய சமீபகால KYC விபரங்களை புதுபிக்க வேண்டும் என்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது

குவைத்திலுள்ள மொபைல் பயனாளர்கள் தங்கள் KYC விவரங்களை புதுப்பிக்குமாறு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்(CITRA) கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பெற இது அவசியம். தங்கள் விவரங்களைப் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் செயலற்றதாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அடையாளச் சான்றுகள் மற்றும் பிற தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், பழைய தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களைப் புதுப்பிக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் Competition and Operators Affairs Department மேலாளர் காலித் அல் கராவி கூறினார். இதையடுத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் பயனாளர்கள் தங்கள் சிவில் ஐடியை ஆன்லைனில் அல்லது மொபைல் செயலி மூலம் புதுப்பிக்குமாறு பயனாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இதை எப்படி செய்வது என்று கேட்டால் நீங்கள் குவைத்திலுள்ள எந்த மொபைல் நெட்வொர்கை பயன்படுத்தி வந்ததாலும் அதற்காக அதிகாரப்பூர்வ செயலியை சம்பந்தப்பட்ட நிறுவனம் Playstore யில் வெளியிட்டு இருக்கும்,அதை உங்கள் கைபேசியில் Download செய்யலாம், பெரும்பாலானவர்கள் Recharge உள்ளிட்டவை செய்வதற்காக ஏற்கனவே Download செய்து பயன்படுத்தி வரலாம். புதியதாக Download செய்பவர்கள் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து login செய்த பிறகு மேற்குறிப்பிட்ட விபரங்களை Update செய்ய முடியும்.

இது Online மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும் மற்றும் புதிய அறிவிப்பின் படி நீங்கள் பயன்படுத்தி வருகின்ற சிம் உங்களுடைய பெயரில் இல்லை என்றால் எந்த நேரத்திலும் சேவை ரத்து ஆகாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை Download செய்து நீங்கள் பயன்படுத்தும் Mobile எண்ணை கொடுத்து login செய்து Profile என்ற Option-ஐ click செய்து பார்த்தாலே சிம் யாருடைய பெயரில் உள்ளது என்று தெரிந்து விடும். சில நேரத்தில் உங்களுடைய I'd proof கொடுத்து சிம் எடுத்திருந்தால் கூட குளறுபடி காரணமாக பெயர் மாற வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Moble Network | KYC Update | Kuwait SIM

Add your comments to Search results for Kuwait SIM

Friday, June 21, 2019

சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 சிம்கார்டு வரையில் எடுத்து மோசடி நடைபெறுவதாக புகார்கள் வெளியாகியுள்ளது:

சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 சிம்கார்டு வரையில் எடுத்து மோசடி நடைபெறுவதாக புகார்கள் வெளியாகியுள்ளது:

    சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்ட பலரது பெயரில் 5 ற்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் குறிப்பிட்ட நபருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக எடுப்பதாக தொடர்பு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
        இதையடுத்து தொலைதொடர்பு துறை விசாரணை துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. சவுதியில் ஒருவர் பெயரில் ஒரு தொலைதொடர்பு நெட்வொர்க்கில் இருந்து இரண்டு சிம்கார்டு வரையில் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.
     ஆனால் இந்த சிம்கார்டு எடுக்கும் போது விரல் அடையாள பதிவு எடுக்கப்படும்.இப்படி எடுக்கப்படும் பதிவை சில சிம்கார்டு விற்பனை செய்யும் பல கடைகள்.அதே நபரின் பெயரில் போலியான Postpaid Sim மற்றும் Pripaid Sim ஆகிய இணைப்பு எடுத்து பலருக்கு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்து மோசடி செய்கிறார்கள்.
     கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதை புகாரில் இரண்டு இந்தியர்களை காவல்துறை கைது செய்தது.தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்களுக்கும் அவர்கள் பெயரில் பயன்படுத்தி சிம்கார்டு இந்த அப்பாவிகள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
     நண்பர்களே எனவே நீங்கள் எந்த நெட்வொர்க் சிம்கார்டு பயன் படுத்தினாலும் அந்த நெட்வொர்க் வாடிக்கையாளர் சேவை மைய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
     இல்லையெனில் விடுமுறை உள்ளிட்டவை காரணமாக விமான நிலையத்தில் வரும்போதுதான் இதுபோன்ற ஏமாற்று வேலைகளால் தாயகம் திரும்ப முடியாதபடி தடைகள் உள்ளது தெரியவரும்.
     இதுவே உங்களுக்கு பாதுகாப்பு நன்றி

Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to Search results for Kuwait SIM