BREAKING NEWS
latest

Liberation Day - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Liberation Day செய்திகள், கட்டுரைகள், Liberation Day புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, December 8, 2022

குவைத் தேசிய தினத்தை முன்னிடடு ஐந்து நாட்கள் பொது விடுமுறை:

குவைத்தில் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருக்கும்

Image : Kuwait National Day

குவைத் தேசிய தினத்தை முன்னிடடு ஐந்து நாட்கள் பொது விடுமுறை:

குவைத்தில் 2023 பிப்ரவரி 23, 24, 25, 26 மற்றும் 27(வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய நாட்களில் National Day, Liberation Day, Isra and Miraj உள்ளிட்ட தினங்கள் வருவதால் விடுமுறை என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு Isra and Miraj விடுமுறை பிப்ரவரி18-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஆனால் இந்த விடுமுறையை அதே மாதம் வியாழக்கிழமைக்கு மாற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றன. குவைத்தில் விடுமுறைக்கான முக்கியமான விதிமுறை என்பது எதாவது அரசு விடுமுறை வார விடுமுறை நாள்களில் வந்தால் அதை மற்றொரு நாள் விடுமுறையாக மாற்றுவது ஆகும்.

அப்படியானால் பிப்ரவரி-23 வியாழன் விடுமுறை என்றும், சனிக்கிழமைக்கு பதிலாக பிப்ரவரி 25 திங்கள்கிழமை, பிப்ரவரி 27 ஆகிய தினங்கள் விடுமுறை என்றும் கருதப்படும். இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை. மேலும் நாட்டில் புத்தாண்டு விடுமுறை இந்த மாதம் டிசம்பர்-2022 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட மூன்று நாட்களாக இருக்கும், அதாவது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 இதன் பிறகு ஜனவரி 2 திங்கட்கிழமை மீண்டும் அதிகாரப்பூர்வமான வேலை நாளாக இருக்கும் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

Official Holiday | Liberation Day | National Day

Add your comments to Search results for Liberation Day

Sunday, February 4, 2024

குவைத்தில் இந்த மாதம் தொடர் விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது

குவைத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : குவைத் டவர்

குவைத்தில் இந்த மாதம் தொடர் விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது

குவைத்தில் இந்த மாதம் Hala February என்று அழைக்கப்படும் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குவைத்தில் பிப்ரவரி-25 தேசிய தினமாகவும், பிப்ரவரி-26 விடுதலை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் விடுமுறைக்காக இருக்கும்.

ஆனால் இந்தமுறை வார விடுமுறை தினங்களும் சேர்ந்து வருவதால் பிப்ரவரி-23 வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி-26 திங்கள்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. அரசுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த அனைவருக்கும் தொடர் விடுமுறை கிடைக்கும் வகையில் இந்த முறை தேசிய தினம் அமைந்துள்ளது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பிப்ரவரி-27 செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் சிவில் சர்வீஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

National Day | Liberation Day | Kuwait Celebration

Add your comments to Search results for Liberation Day

Friday, February 5, 2021

குவைத்தில் தேசிய தின நாட்களில் தற்காலிகமாக பகுதிநேர ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்:

குவைத்தில் தேசிய தின நாட்களில் தற்காலிகமாக பகுதிநேர ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்;பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை தேசிய தின விடுமுறை நாட்களில்

குவைத்தில் தேசிய தின நாட்களில் தற்காலிகமாக பகுதிநேர ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

குவைத்தில் பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை தேசிய தின விடுமுறை நாட்களை இணைத்து ஒரு பகுதிநேர ஊரடங்கு அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் பொதுவெளியில் வருவார்கள் என்பதாலும், கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கும் நிலையிலும் மேலும் நோய்தொற்று பரவல் ஏற்பட இது காரணமாக அமையும் என்பதாலும் இந்த முடிவுக்கு அமைச்சரவை வரலாம் என்று உள்ளுர் தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல் வரும் தினங்களில் தெரிய வரும்.

மேலும் குவைத்தில் வருகின்ற பிப்ரவரி- 25 National Day மற்றும் பிப்ரவரி-26 Liberation Day தினங்கள் ஆகும். கொரோனா பரவல் காரணமாக பொது நிகழ்ச்சிக்கள் அனைத்திற்கும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கடந்த வருடமும் தேசிய தின கொண்டாட்டங்கள் விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா நோய்த்தொற்று நாட்டில் கண்டறியப்பட்டால் நிகழ்ச்சிகள் அனைத்தும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

Add your comments to Search results for Liberation Day