அமீரகத்தில் வேலைக்காக செல்வோர் இனிமுதல் ஏமாறாமல் தப்பிக்கலாம், விசா மோசடிக்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது
அமீரகத்தில் வேலைக்காக செல்வோர் இனிமுதல் ஏமாறாமல் தப்பிக்கலாம்,இந்த செய்தியை அதிகமாக பகிர்வு செய்து உதவுங்கள்
அமீரகத்தில் உள்ள துபாய்,அபுதாபி உள்ளிட்ட பல எமிரேட்ஸில் உள்ள பிரபல கம்பெனிகளில் வேலை கிடைத்துள்ளது என்று நம்பி அதே கம்பெனிகளின் பெயரில் உண்மையான Offer letter என்று தோன்றும் அளவுக்கு போலியான letter பெற்று ஏமாறுவது தொடர்கதை ஆகின்றது. இதற்காக பல லட்சங்களை கொடுத்து விசா பெற்று பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்ட செய்திகளை பலர் சமூக ஊடகங்கள் வழியாக பகிர்வு செய்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதை படிக்கின்ற அனைவரும் மற்றவர்களுக்கு இந்த செய்தியை பகிர்வு செய்து உதவுங்கள். வேலைக்காக முயற்சி செய்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த வசதிபற்றி தெரியாது. அதாவது நீங்கள் அமீரகத்தில் வேலைக்காக பெறுகின்ற Offer letter யின் உண்மை தன்மையை கண்டறிவது உள்ளிட்ட பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்திய தூதரகத்தின் கீழ் உள்ள PBSK உதவி மையத்தின் செயலி வழியாக சில நிமிடங்களில் பரிசோதனை செய்ய முடியும் என்று அதிகாரி சித்தார்த் குமார் பரேலி தெரிவித்தார். இதற்காக வேலைக்காக பெறுகின்ற Offer letter-ஐ நீங்கள் Pdf Format ஆக மாற்றி தயார் நிலையில் வைக்க வேண்டும். பின்னர் PBSK உதவி மையத்தின் செயலி உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்தபிறகு Job Offer Verification என்ற Option- யில் உங்கள் பெயர் விபரங்கள் உள்ளிடவை பதிவு செய்து அத்துடன் Pdf Format-யில் உள்ள Offer letter இணைத்து பதிவேற்ற வேண்டும், இதையடுத்து உடனையோ அல்லது ஓரிரு நாட்களிலோ உங்கள் Offer letter-யின் உண்மை தன்மையினை அதிகாரிகள் பரிசோதனை செய்து பதில் தருவார்கள் அதுவரையில் உங்களுக்கு வேலைக்காக ஏற்பாடு செய்கின்ற ஏஜென்சியில் உள்ள எந்தவொரு நபரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோல் Visa வின் உண்மை தன்மையினையும் அறிந்து கொள்ள முடியும். PBSK- செயலியை இங்கே Click செய்து Download செய்யலாம் Link:https://play.google.com/store/apps/details?id=com.pbsk
இதுபோல் அமீரகத்தில் வேலைக்காக வந்தபிறகு ஏற்படுகின்ற தொழில் பிரச்சனை, சட்ட உதவிகள், வேலை சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்காக PBSK-யில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட மேலும் பல வசதிகளை இந்த செயலி வழியாக பெற முடியும் என்று அதிகாரி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். கண்டிப்பாக இதை படிக்கின்ற ஒவ்வோரு அமீரக நண்பர்களும் இதை மற்றவர்களுக்கு பகிர்வு செய்யவும்.இதுபோல் Helpline எண்ணில் தொடர்பு கொண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் உதவியை பெற முடியும்.
Fake Offer Letter | Uae Visa | PBSK Check