குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்ய இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்ய இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான காலக்கெடு இந்த மாதம் ஜரவரி 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டில் எஞ்சியிருக்கும் குடியிருப்பு சட்ட மீறல் நபர்களை கைது செய்து நாடுகடத்த இதுவரையில் கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
சட்டவிரோதமாக குடியிருப்போருக்கான பகுதிநேர பொது மன்னிப்பு கடந்த டிசம்பர் 1 முதல் 31 வரையில் வழங்கப்பட்ட நிலையில்,அதை உள்துறை அமைச்சகம் இந்த ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது.இருப்பினும், இதுவரை உள்துறை அமைச்சகம் எதிர்பார்த்த குறிப்பிடத்தக்க முன்னெற்றங்கள் எதுவும் சட்டவிரோதமாக உள்ள நபர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்று அமைச்சகம் கண்டறிந்துள்ளது.பொதுமன்னிப்பு அறிவித்து 50 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை, 5,000 க்கும் குறைவான மக்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தச் சூழலில்தான், நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு சோதனைக்கான திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதை பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறுபட்ட பாதுகாப்பு படையினருக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தற்போது,நாட்டில் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டவிரோத தங்கியுள்ளனர் உள்ளனர்.
Kuwait Police | Illegal Immigrant | Partial Amnesty