இந்தியன் ரிசர்வ் வங்கி விதித்துள்ள சைபர் பாதுகாப்பு உத்தரவுகளுக்கு இணங்காதது காரணம் என்று தெரியவந்துள்ளது
Image : Reserve Bank of India Head office
குவைத் பிஎஸ்சி மற்றும் பாங்க் ஆப் பஹ்ரைன்க்கு இந்தியன் ரிசர்வ் வங்கி ரூ.2.66 கோடி அபராதம் விதித்துள்ளது:
சைபர் பாதுகாப்பு உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, பாங்க்-ஆப்-பஹ்ரைன், குவைத் பிஎஸ்சி-க்கு இந்தியாவுக்கான செயல்பாடுகளுக்கு ரூ.2.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் தரவுத்தளத்தில் அசாதாரணமான, அங்கீகரிக்கப்படாத உள்புற மற்றும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் கண்டறியும் வழிமுறைகளை செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசுக்கு வங்கி அளித்த பதில் மற்றும் தனிநபர் விசாரணையில் அளிக்கப்பட்ட கூடுதல் வாய்மொழி பதில்களை பரிசீலித்த பிறகு விதிமுறை மீறல் குற்றம் தற்போதும் நிலுவையில் இருப்பதாகவும், அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kuwait BSC | Bahrain Bank | RBI Fine