சவுதியில் போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை விற்றதாக இருவரை அதிகாரிகள் கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Image : MOH Saudi
சவுதியில் போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை விற்றதாக இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்
சவுதியின் ரியாத்தில் போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை விற்ற இரண்டு பேரை சுகாதாரத் துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் சவுதி நாட்டைச் சேர்ந்தவர்(காவலராகப் பணிபுரியும் நபர்), மற்றொரு வெளிநாட்டவரும் சிக்கியுள்ளார். போலியான பி.சி.ஆர் சான்றிதழ்களை விற்கும் ஒரு கும்பல் குறித்து ரியாத் சுகாதாரத் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில் இவர்களை அதிகாரிகள் பொறிவைத்து பிடித்தனர்.சவுதி நாட்டைச் சேர்ந்த காவலராக வேலை செய்யும் நபர் மற்றும் அந்த தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் வெளிநாட்டினர் இருவரும் சேர்ந்து இந்த சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட வந்துள்ளனர்.
மேலும் விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட சில போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.விசாரணையில் இருவரும் நிறுவனத்தின் அறிவு இல்லாமல் இரகசியமாக போலி பி.சி.ஆர் சான்றிதழ்களை தயார் செய்து விற்றுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக பி.சி.ஆர் சான்றிதழ்கள் வழங்குவதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சான்றிதழ் வழங்க வேண்டிய அரசு தளத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து போலி சான்றிதழ்களை தயார் செய்து வழங்கி வந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக போலீசில் ஒப்படைத்ததாக ரியாத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது சட்டமாகும்.
Not Renewed | Banned Countys | Saudi Fined