இந்தியர்கள் உள்ளிட்ட தற்காலிகமாக பயணத்தடை விதிக்கப்பட்ட 18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் செப்டம்பர்-1,2021 முதல் ஓமானுக்குள் நேரடியாக நுழையலாம்
Image : Beautiful Oman
இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செப்டம்பர் 1 முதல் ஓமானுக்குள் நுழையலாம்;விதிமுறைகள் பின்வருமாறு
இந்தியா,பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக ஓமானில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை ஓமான் நீக்கியதை அடுத்து வெளிநாட்டவர்கள் மீண்டும் நாட்டில் நுழைய முடியும். நேற்று(24/08/21) ஓமான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர்-1,2021 உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். ஓமான் குடிமக்கள், ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டவர்கள், ஓமான் விசா வைத்திருப்பவர்கள், ஓமானுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள்மற்றும் ஓமானில் நுழைய On- Arrival பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அனைத்து தரப்பினரும் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க நாட்டிற்குள் நுழையலாம்.
அனைத்து பயணிகளும் ஓமனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும். அதுபோல் சில தடுப்பூசி ஒரு டோஸ் எடுத்தால் போதும் என்றவர்கள் அதை எடுத்தால் போதுமானதாகும். பயணிகள் வரும்போது QR-CODE உள்ள தடுப்பூசி சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கடைசி டோஸ் தடுப்பூசி ஓமானுக்கு வரும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல் ஓமன் சுகாதார அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும். பயணத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை Rapid-Test பரிசோதனை சான்றிதழ் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு ஓமான் வந்தவுடன் தனிமைப்படுத்தல் தேவையில்லை இந்த பரிசோதனை முடிவிலும் QR-CODE இருக்க வேண்டும்.
அதேபோல் சர்வதேச விமானங்களில் Transit உட்பட எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பயண நேரத்துடன் வருபவர்கள், பயணத்தின் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் இந்தியா உள்ளிட்ட எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரம் உள்ளவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்மறை PCR பரிசோதனை முடிவு இல்லாமல் வரும் பயணிகள் ஓமான் வந்தவுடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரை மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிந்து(Tracking Device) தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். தொடர்ந்து PCR பரிசோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், நோயாளி பரிசோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்கு Isolation-யில் இருக்க வேண்டும். அதுபோல் ஓமன் வந்தவுடன் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு நேர்மறையாக(Positive) இருந்தாலும், முன்பு நாட்டிற்கு வெளியே கோவிட் பாதிக்கப்பட்டு பின்னர் கோவிட் குணமடைந்தவராக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கோவிட் உறுதிசெய்யப்பட்ட நேரத்தில், அந்த நாட்டில் தனிமைப்படுத்தல் செய்து அதை நிறைவடைந்ததற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Oman Indians | Return Oman | September Oman