குவைத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் 83,000 வெளிநாட்டினர்கள் தங்கள் விசாக்களை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவல் குவைத் மனிதவள மேம்பாட்டுக்கான குழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020,செப்டம்பர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு இடையிலான நாட்களில் இவர்கள் வெளியேறியதாக தெரிகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் குவைத் அரசுத்துறையில் வேலை செய்துவந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த காலகட்டத்தில் பல்வேறு அரசாங்க திட்டங்களில் வேலை செய்துவந்த 2144 வெளிநாட்டு தொழிலாளர்களின் விசாகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் குவைத்தில் அரசு துறைகளான சுகாதார மற்றும் கல்வி துறைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். புள்ளிவிபரங்களின்படி சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களாக 65% சதவீதம் வெளிநாட்டினர் சேவையாற்றி வருகின்றனர்.
இதுபோல் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் மயமாக்கப்பட்ட குவைத் ஏர்வேஸ், குவைத் உணவுப்பொருள் உற்பத்தி ஆலைகள் மற்றும் குவைத் பொதுப் போக்குவரத்து உள்ளிடவையிலும் வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர்.இந்த காலகட்டத்தில் விடுத்தொழிலாளர் துறையில் வேலை செய்துவந்த சுமார் 7385 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Kuwait Airport | Worker Left | Short Time