BREAKING NEWS
latest

Shuwaikh Area - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Shuwaikh Area செய்திகள், கட்டுரைகள், Shuwaikh Area புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, January 8, 2021

குவைத்தில் டேங்கர் லாரி வெடித்து பயங்கரமான விபத்து; 2 பேர் உயிரிழந்தனர்


(விபத்தில் சிக்கிய லாரி இதுதான்)

குவைத்தின் சுவைக்(Shuwaikh Industrial Area) தொழில்துறை பகுதியில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து சிதறிய பயங்கரமான விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.நேற்று இரவு இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான குவைத் தீயணைப்பு துறையின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வியாழக்கிழமை மாலை எண்ணெய் டேங்கர் வெடித்து சிதறிய பயங்கரமான விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபர் படுகாயமடைந்ததாகவும் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த கூடுதலாக தகவல்கள் தெரியவில்லை.

மேலும் ஷுவைக் தொழில்துறை பகுதியில் நடந்த விபத்தில் லாரி பயங்கரமான வெடித்ததில் சுமார் 30 மீட்டர் நகர்ந்து பாலத்துடன் மோதியது எனவும்,தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும், இந்த விபத்து தொடர்பான அனைத்து விவரங்களையும் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடைய அங்குள்ள பட்டறையில் விபத்தில் சிக்கிய டேங்கரில் வெல்டிங் சம்பந்தப்பட்ட வேலைகள் நடைபெற்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

Two Killed | Tanker Explosion | Shuwaikh Area

Add your comments to Search results for Shuwaikh Area

Monday, November 23, 2020

குவைத்தில் அரியவகை கைகடிகாரங்கள் ஏலத்தில் வருகிறது;உங்களுக்கு தேவை என்றால் ஏலம் எடுக்கலாம்:

குவைத்தில் அரியவகை கைகடிகாரங்கள் ஏலத்தில் வருகிறது;உங்களுக்கு தேவை என்றால் ஏலம் எடுக்கலாம்:


Nov-23,2020

குவைத்தில் கடத்தல் முயற்சியின் போது கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த வைரங்கள்  பதிக்கப்பட்ட கைகடிகாரங்கள் இவை என்றும், மொத்தம் 9 சொகுசு கடிகாரங்களை சுங்க அதிகாரிகள் பொது ஏலத்தில் விடுகிறது, ரோலக்ஸ் நிறுவனத்தின் சில அரிய பதிப்புகள் இவை என்று கூறப்படுகிறது. இரகசிய இணையதளம் மூலம் ஆடம்பர கடிகாரங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் இதை கடத்தி வரும்போது சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டார்.

இது தொடர்பான அறிக்கையில் சில நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து டஜன் கணக்கான மேலும் பல ஆடம்பர கடிகாரங்களும் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், சட்ட செயல்முறை முடிந்ததும் பிற அவைகளும் பொது ஏலத்திற்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது ஏலம் விடப்படும் இந்த கடிகாரங்கள் உண்மையானவை எனவும், போலியானவை அல்ல என்பதை குவைத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள்  உறுதிப்படுத்தியுள்ளது. முக்கியமாக அரிதாகவே உற்பத்தி செய்யபடும் இந்த கடிகாரங்கள் குவைத்தில் உள்ள ஏஜென்சி ஷோரூமில் எப்போதும் கிடைக்காது. முன்பதிவு செய்த பின்னர் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு தான் இப்படிபட்ட அரிய கைகடிகாரங்கள் கிடைக்கும் என்று ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவைத்தில் வருகிற புதன்கிழமை(11/25/2020) பிற்பகல் 03:00 மணிக்கு, கல்ப் வங்கியின் பின்னால் உள்ள ஷுவைக் துறைமுகத்திற்கு எதிரே உள்ள, ஷுவைக் சுங்க பொது நிர்வாகத்தின்  தலைமையகத்தில் இவை ஏலத்திற்கு வைக்கட்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location:

General Administration of Customs (Administration Theater)  Shuwaikh Area, opposite Shuwaikh Port behind the Gulf Bank.

Add your comments to Search results for Shuwaikh Area