குவைத் விஸ்மையா இன்டர்நேஷ்னல் அமைப்பின் ஆலோசனை குழு தலைவராக டாக்டர்.ஹைதர் அலி தேர்வு
குவைத் விஸ்மையா இன்டர்நேஷ்னல் அமைப்பின் ஆலோசனை குழு தலைவராக டாக்டர்.ஹைதர் அலி அவர்கள் தேர்வு செய்யபட்டார்
வெளிநாட்டினர் மறுவாழ்வு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, குவைத்தில் வசிக்கும் கலை மற்றும் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கமளித்து இந்திய வெளிநாட்டினரை ஒரே குடையின் கீழ் சேர்த்து, வெளிநாட்டினர் சந்திக்கும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு காண்பதற்காக, பாரபட்சமின்றி உழைக்கும் முன்நிரையில் உள்ள நபர்களின் ஆதரவுடன் துவங்கப்பட்ட, விஸ்மையா இன்டர்நேஷ்னல் கலை மற்றும் சமூக சேவை கூட்டமைப்பின், தமிழ் பிரிவின் துவக்க நிகழ்ச்சி 2021 அப்பாசியா ஹைடன் ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெற்றது.
தலைவர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிஜு ஸ்டீபன் இது தொடர்பான அறிக்கையை முன்வைத்தார். அமைப்பின் Chairman பி.எம்.நாயர் அமைப்பை செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தார் மற்றும் விழாவில் முதல் உறுப்பினர் படிவத்தை பொருளாளர் ஜியாஷ் அவர்கள், TVS ஹைதர் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஹைதர் அலிக்கு அவர்களுக்கு வழங்கியதன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு துவங்கி வைக்கபட்டது. பின்னர் ஹைதர் அலி அவர்களிடமிருந்து Vice Chairman ஜெயன்குமார் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து விஸ்மையா இன்டர்நேஷ்னல் அமைப்பின் ஆலோசனை குழு தலைவராக டாக்டர்.ஹைதர் அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்,இதனையடுத்து திரு.அறந்தை கணேசன் அவர்களை தமிழ் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதுபோல் அமைப்பின் மகளிர் அணி தலைவி திருமதி.ஷைனி பிராங்க் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை குறித்து பேசினார். சுனில்குமார், டாக்டர்.குமார், பொறியாளர் சேகர்,பொறியாளர் சாந்தகுமார், கவிஞர் மாணிக்கம், மன்னை ராஜா,பாலு, கண்ணன், ரிஸ்மியா,சரண்யா தேவி உள்ளிட்டவர்கள் கலந்துந்கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பிரபல பின்னணி பாடகர்கள் சிந்து மற்றும் ஸ்ருதி ஆகியோர்கள் பாடல்களை படி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
TVS Haider | Haider Ali | Kuwait FlyTvs