குவைத்தில் காரிலிருந்து கிடைத்த பணத்தை திருப்பிக் கொடுத்து உதாரணம் காட்டினார் இந்தியரான ஓட்டுநர் செயல் பாராட்டை பெற்றுள்ளது
Image credit: ஓட்டுநர் சரத் மற்றும் எகிப்து நாட்டவர்
குவைத் ஓட்டுநரான இந்தியரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது
குவைத்தில் காரிலிருந்து கிடைத்த பணத்தை திருப்பிக் கொடுத்து உதாரணம் காட்டினார் இந்தியரான ஓட்டுநர் ஒருவர். கேரளா மாநிலம் சங்கானசேரியை சேர்ந்த சரத் என்பவரே இந்த சிறந்த முன்மாதிரியான செயலை செய்துள்ளார். சரத் மெஹபூலாவில் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். வழக்கமான பயணத்தில் வண்டியில் எகிப்து நாட்டவர் ஒருவர் ஏறினார், பின்னர் சால்மியாவில் இறங்கினார். பின்னர் வீடு திரும்பிய சரத், மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது காரில் பர்ஸ் கிடப்பதை அவரது மனைவி நீது பார்த்துள்ளார். அதில் 400 தினார் ரொக்கம், காப்பீட்டு அட்டை மற்றும் பிற ஆவணங்கள் இருந்தன.
இதையடுத்து சற்று முன் தன் காரில் ஏறியது எகிப்து நாட்டவரின் பணப்பை என்பதை உணர்ந்த சரத் அதை எப்படியோ திருப்பி கொடுக்க முயன்றார். ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க வழியின்றி சரத் குழப்பத்தில் இருந்துள்ளார். இதேபோல் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் முஹம்மது அஸ்ஸாப் என்பவர் காணாமல் போன பணத்தைக் கண்டுபிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட்ட தகவலை பலருக்கு தெரிவித்தார். இது கேரளா நண்பர்களால் ஒருங்கிணைத்த KBT வாட்ஸ்அப் குழுவையும் சென்றடைந்தது.
இதை பார்த்த ஷரத், KBTயின் தலைவர் இக்பாலுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது சரத்துக்கு இப்ராகிம் முஹம்மது ஆசாபின் போன் நம்பர் கிடைத்தது. இதையடுத்து சரத் அவரை தொடர்பு கொண்டார். பின்னர் மெஹபூலா வந்த அவர் பணத்தையும் மற்ற ஆவணங்களையும் நேரடியாக எகிப்து நாட்டவரிடம் திருப்பி கொடுத்தார். சரத் 13 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.அவரது மனைவி நீது குவைத்தில் செவிலியராக உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Indian Driver | Kuwait Driver | Taxi Driver |