BREAKING NEWS
latest

new covid20 - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் new covid20 செய்திகள், கட்டுரைகள், new covid20 புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, January 3, 2021

குவைத் புதிய கொரோனா பரவல் காரணமாக மீண்டும் விமானங்களை நிறுத்துவது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ளது


குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்துவதற்காக அறிவித்துள்ளது.வருகின்ற ஜனவரி-6 தேதி காலை 4 மணிமுதல்  அங்கிருந்த வருகின்ற பயணிகள் விமானங்களை நிறுத்துகிறது என்று அறிவித்துள்ளது.இந்தியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில்  குவைத்,என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை. துபாயில் இருந்து குவைத் வரும் விமானங்களை நிறுத்தினால் மறைமுகமாக இந்தியர்கள் குவைத்தில் நுழைந்து வருகின்ற வழியும் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடைய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் குவைத்தில் இருப்பது கண்டறியப்பட்டால் நிலம், வான் மற்றும் கடற்படை எல்லைகளை மீண்டும் மூடுமாறு சுகாதார அமைச்சகம் அமைச்சரவைக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த திட்டம் நாளை நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உள்ளூர் அரபு நாளேடு ஒன்று சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்க்கோள்காட்டி மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் கோவிட்-20 வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

அதே நேரத்தில், மரபணு மாற்றப்பட்ட கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தற்போதுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தல் காலத்தை அவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க தற்போதுள்ள அமைப்புகள் மேலும் பலப்படுத்தப்படும். இணங்காத நாட்டினருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்கவும், சட்டத்தை மீறும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

new covid20 | kuwait suspend | Flights January6

Add your comments to Search results for new covid20