குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது
Image : Civil Id Office
குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்
குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதற்காக ஏற்கனவே 5 தினார் கட்டணம் செலுத்தியவர்கள், புதிதாக மீண்டும் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சிவில் கார்டு வழங்குவதற்கு முன்பு செலுத்தப்பட்ட 5 தினார் கட்டணம் அவர்கள் பெயரில் ரசீது பதிவு செய்யப்படும்.
இந்த தகவலை சிவில் தகவல் ஆணைய பதிவு விவகார துணை இயக்குநர் ஜெனரல் ஜாபர் அல்-கந்தாரி தெளிவுபடுத்தினார். இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அட்டை வழங்கல் விரைவுபடுத்தும் நோக்கில் இதை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். பெரும்பாலான புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிவில் ஐடி கார்டுகளை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்க முடிகிறது எனவும், மே 23க்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 200,000 சிவில் ஐடி அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன,இதில் எத்தனை நபர்கள் தற்போதைய நிலையில் விண்ணப்பித்த சிவில் ஐடி அட்டைகளை பெறுவார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் இவ்வளவு விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி அட்டை வழங்குவதில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையிலேயே இந்தத் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான சிவில் ஐடி விநியோகம் நிறுத்தப்பட்டு,புதிய விண்ணப்பத்தை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Kuwait Id | Kuwait Paci | Civil Id