BREAKING NEWS
latest

Kuwait Id - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Id செய்திகள், கட்டுரைகள், Kuwait Id புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, October 20, 2023

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது

Image : Civil Id Office

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதற்காக ஏற்கனவே 5 தினார் கட்டணம் செலுத்தியவர்கள், புதிதாக மீண்டும் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சிவில் கார்டு வழங்குவதற்கு முன்பு செலுத்தப்பட்ட 5 தினார் கட்டணம் அவர்கள் பெயரில் ரசீது பதிவு செய்யப்படும்.

இந்த தகவலை சிவில் தகவல் ஆணைய பதிவு விவகார துணை இயக்குநர் ஜெனரல் ஜாபர் அல்-கந்தாரி தெளிவுபடுத்தினார். இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அட்டை வழங்கல் விரைவுபடுத்தும் நோக்கில் இதை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். பெரும்பாலான புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிவில் ஐடி கார்டுகளை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்க முடிகிறது எனவும், மே 23க்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 200,000 சிவில் ஐடி அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன,இதில் எத்தனை நபர்கள் தற்போதைய நிலையில் விண்ணப்பித்த சிவில் ஐடி அட்டைகளை பெறுவார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் இவ்வளவு விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி அட்டை வழங்குவதில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையிலேயே இந்தத் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான சிவில் ஐடி விநியோகம் நிறுத்தப்பட்டு,புதிய விண்ணப்பத்தை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Id | Kuwait Paci | Civil Id

Add your comments to Search results for Kuwait Id

Tuesday, October 3, 2023

குவைத்தில் Sahel செயலியில் ஆங்கிலம் இல்லை என்ற பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

Sahel செயலியில் ஆங்கிலம் எப்படி வரவழைப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்

Image : Sahel Application Front View

குவைத்தில் Sahel செயலியில் ஆங்கிலம் இல்லை என்ற பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

குவைத்திலுள்ள வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் தங்களுடைய அடையாளம் உள்ளிட்ட அனைத்து விதமான சேவைக்கும் ஆதாரமாக Sahel செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் உள்ள ஒரே குறைபாடு தற்போதைய நிலையில் அதில் அரபு மொழி மட்டுமே உள்ளது என்பதாகும். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி தேர்வு வசதி அதில் இல்லை வரும் காலங்களில் பிற மொழிகளும் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போதைய நிலையில் ஆங்கிலம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான நபர்கள் அரபு மொழி தெரிந்த பிறருடைய உதவியை பயன்படுத்தியே அதை login செய்து மற்றும் பிற வசதிகளை இணைப்பது போன்றவற்றை செய்ய முடிகிறது. இதற்கான தற்காலிகமான தீர்வு ஒன்றை உங்களுக்கு தெரிய படுத்தலாம் என்று நினைக்கிறேன். பலருக்கும் தெரியலாம், தெரியாத நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள். இந்த trick ஆனது Android Mobile யில் Work ஆகும், ஆனா‌ல் I-phone யில் work ஆகாது.

அரபு மொழியயை ஆங்கில மொழிக்கு மாற்ற முதலில் உங்கள் கைபேசியில் உள்ள Sahel செயலியை Open செய்ய வேண்டும் பிறகு அந்த பக்கத்தை Close செய்யாமல் Minimise செய்த பிறகு அப்படியே phone Setting ஐ open செய்து Language Option தேர்வு செய்து அதில் UK or US உள்ளிட்ட எதாவது ஒரு English Language தேர்வு ஆகி இருக்கும், அதில் எது தேர்வாகி இருந்தாலும் அதற்க்கு எதிர்மறை Change செய்யுங்கள். UK English என்றால் US English எனவும், US என்றால் UK English என மாற்றலாம்.

இது மட்டுமல்ல Indian English இப்படி எதாவது ஒரு English language ஐ மாற்றுங்கள் அப்போது சில நொடியில் Language change ஆகும். இந்நிலையில் அதை அப்படியே Minimise செய்து Sahel செயலி பக்கத்தை மாற்றி பாருங்க அரபு மொழி English ஆக மாறும். கண்டிப்பாக இதை செய்யும் போது செயலி பக்கம் Setting பக்கம் இரண்டும் Close ஆக கூடாது. ஒவ்வொரு முறையும் செயலியில் எதாவது அறிய வேண்டும் என்ற இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். இதுபோல் மற்றொரு தகவலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Sahel Application | Kuwait Id | Civil Id

Add your comments to Search results for Kuwait Id

Saturday, June 26, 2021

குவைத்தில் ஞாயிறு முதல் முக்கியமான இடங்களில் நுழைய தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தடை

குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஞாயிறு முதல் முக்கியமான இடங்களில் நுழைய தடை என்பதால் இன்று கூட்டம் அலைமோதியது

குவைத்தில் ஞாயிறு முதல் முக்கியமான இடங்களில் நுழைய தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தடை

குவைத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகின்ற 27/06/21 ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கியமான வணிக வளாகங்களில் அனுமதி தடை அமல்படுத்தப்பட்டு வருவதால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மால்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இதுவரையில் இல்லாத வகையில் கடுமையான நெரிசல் காணமுடிந்தது. நாட்டின் மிகப்பெரிய மாலான அவென்யூஸில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் நகராட்சி அதிகாரிகள் முக்கியமான நுழைவு வாயில்களை மூடினர்.அதேபோல் குவைத்தில் உள்ள பிற மால்கள் மற்றும் முக்கியமான பல ஹைப்பர் மார்க்கெட்டுகளில் நெரிசலாக மக்கள் காணப்பட்டனர்.மேலும் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு உள்ள முதல் வெள்ளிக்கிழமை என்றதும் மால்களில் பெரும் நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து ஜூன்-27 ஞாயிற்றுக்கிழமை அதாவது நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போடாதவர்கள் பெரிய வணிக வளாகங்கள் ,உணவகங்கள், கஃபேக்கள் சலூன் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் நுழைய தடை அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் முக்கிய மால்களின் நுழைவாயில்களில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதுபோல ஞாயிற்றுக்கிழமை முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே 6,000 சதுர மீட்டருக்கும் அதிகமான உள்ள வணிக வளாகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள், அதுபோல் உணவகங்கள், கஃபேக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சாலூன் உள்ளிட்ட இடங்களிலும் நுழைய முடியும், எனவே தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும்போது சிவில் ஐடி துறை வெளியிட்டுள்ள "My Kuwait ID" என்ற செயலி அல்லது சுகாதார அமைச்சகத்தின் "Immune App" செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து, தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரமாக இவற்றில் ஏதேனும் ஒன்றை இந்த இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.மேலும் உங்கள் செயலியில் பச்சை அல்லது மஞ்சள் அடையாளம் தெரியும் நபர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட இடங்களில் நுழைய முடியும்

Add your comments to Search results for Kuwait Id

Wednesday, March 17, 2021

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது;குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இதில் பங்கேற்கலாம்

Image : Kuwait Indian Embassy

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மார்ச்-24 அன்று ஓபன் கவுஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் நடத்தப்படும் ஓபன் கவுஸ் நிகழ்ச்சியின், இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி மார்ச்-24 (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் என்று இந்திய தூதரகம் சார்பில் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத நிகழ்ச்சியின் கருப்பொருள் கோவிட் தடுப்பூசி முன்பதிவு, JEE, NEET மற்றும் NATA தேர்வு ஆகியவைகள் ஆகும். குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு community.kuwait@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் பெயர், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண் போன்றவை சேர்த்து அனுப்பலாம்.நிகழ்வில் கலந்து கொள்ள....

Add your comments to Search results for Kuwait Id

Monday, December 14, 2020

குவைத் இந்திய தூதரகம் சார்பில் டிசம்பர் மாதத்திற்கான Open-House நடைபெறும் தேதி அறிவிப்பு:

Dec-14,2020

குவைத்தில் கொரோனா காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட Open House(குறை கேட்கும்  நிகழ்வு) கடந்த மாதம்(நவம்பர்) மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்திற்கான Open House சந்திப்பு நிகழ்ச்சி தேதியை சற்றுமுன் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் வருகிற டிசம்பர்-23,புதன்கிழமை சரியாக பிற்பகல் 3.30 மணிக்கு, நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும் எனவும், தூதர் சி.பி.ஜார்ஜ் இதில் கலந்து கொள்வார்.நிகழ்ச்சியில் தலைப்பு "Labour Laws Of Kuwait" என்பதாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரிலான  பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண், குவைத்தில் உள்ள உங்கள் முகவரி உள்ளிட்டவை மின்னஞ்சல் முகவரி community.kuwait@mea.gov.in க்கு அனுப்ப வேண்டும். இதையடுத்து பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் Meeting ID மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யும் நபர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


Add your comments to Search results for Kuwait Id

Monday, November 16, 2020

குவைத் இந்திய தூதரகம் சார்பில் Open House நவம்பர்-25 மீண்டும் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது:

குவைத் இந்திய தூதரகம் சார்பில் Open House  நவம்பர்-25 மீண்டும் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது:


Nov-16,2020

குவைத்தில் கொரோனா காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட Open House(குறை கேட்கும்  நிகழ்வு) சந்திப்பு நவம்பர் 25 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் தொடங்கும். நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும், இந்நிகழ்ச்சியில் தூதர் சிபி ஜார்ஜ் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் சிபி ஜார்ஜ் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிட் பிரச்சினை காரணமாக  செப்டம்பர் மாதம் நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற நவம்பர் 25 அன்று Open House ஆன்லைனில் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி நிகழ்ச்சியில் தலைப்பு  Embassy Registration Drive & Amnesty(தூதரகம் பதிவு இயக்கி மற்றும் பொது மன்னிப்பு) என்பதாகும்.

குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரிலான  பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண், குவைத்தில் உள்ள உங்கள் முகவரி, மற்றும் திறந்த இல்லத்தில் உயர்த்த விரும்பும் விஷயம் ஆகியவை மின்னஞ்சல் முகவரி Kuwait@mea.gov.in க்கு அனுப்ப வேண்டும். இதையடுத்து பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் Meeting ID மற்றும் பிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Kuwait Id